பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள்_சமயம் எது?-101 என்று கேட்கின்றார். அடுக்கி வருகின்ற துன்பங்கள் மக்களை இரு வகையாகப் பாதித்தலைக் காண்கின்றோம். சாதாரண மக்கட்குத் துன்பம் நேர்கையில் அவர்களைக் காழ்ப்புடையவர் களாகவும் கொடுமை நிறைந்தவர்களாகவும் மாற்றக் காண் கிறோம். பண்பாடுடையாருக்கு வரும் துன்பங்கள் பொன்னைக் காய்ச்சப் பயன்படும் நெருப்புப் போன்றவை, நெருப்பு, பொன்னை மாசு நீக்கி ஒளியுறச் செய்வதுபோல இத் துன்பங்கள் யாரைப் பாதிக்கின்றனவோ அவர்களுடைய மாசைத் துடைத்து ஒளிவிடச் செய்யப் பயன்படுகின்றன. இதனை அடுத்து, மதுரை எரியக் காரணம் "...வெள்ளி வாரத்து ஒள் எரியுண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடி"(23:135)என்று மதுராபதித் தெய்வம் கூறியதனால், மதுரையின் அழிவுக்கும் பாண்டியன் இறப்புக்குங்கூடத் தாம் நேரான காரணமல்லர், துணைக் காரணமே என்பதைக் கண்ணகித் தெய்வம் நன்கு அறிகின்றார். எனவே, மதுரையை அரசோடு ஒழிப்பேன்'என்று வஞ்சினம் கூறிய பெருமாட்டி, அவை இரண்டையும் தாம் செய்வதற்குத் தேவையே இல்லையென்பதையும், இந்த அண்டத்தின் சட்டத்தில், அறிவுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தில், ஏனைய உயிர்களைப் போலத் தாமும் ஒரு சிற்றுயிரே என்பதையும், நிகழ்ச்சிகள் நிகழப் பிற உயிர்கள் துனைக் காரணமாக அமைவது போலத் தாமும், பாண்டியன் மரணம், மதுரையின் அழிவு ஆகிய மாபெரும் நிகழ்ச்சிகட்குத் துணைக் காரணமாகவே அமைய நேர்ந்தது என்பதையும் அறிந்தார் போலும், பிற குற்றங்களிலிருந்து இயல் பாகவே நீங்கி, இறுதியாக நிற்கின்ற ஆணவமலத்தால் மட்டும் ஒரளவு கட்டுண்டு நின்ற இப் பெருமாட்டி, அங்கியம் கடவுளும்