பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 103 கூற்றுப்படி கண்ணகியின் வளர்ச்சியில் மிக நுண்மையானதும் எளிதில் அறிவுக்குப் புலப்படாததும் ஆகிய ஒரு குறை இருப் பதை அறியமுடியும், ஊர்குழ் வரியில் தொடங்கி வழக்குரை காதை முடிய கண்ணகியினிடத்து அகங்காரம் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை அறிகிறோம். அதற்கும் மேலாக அவளுடைய ஆழ்மனத்தில் தவறிழைத்த மன்னவன்மேல் ஒர் ஆழமான காழ்ப் புணர்ச்சி (Malice) பதிந்து விட்டதை அறிய முடிகின்றது. மதுரை அழிவதற்குத் தான் காரணமல்லள் என்பதை அறிந்ததால் அகங்காரம் அழிந்த பொழுதே ஆழ்மனத்தில் தோன்றிய காழ்ப் புணர்ச்சியும் போயிற்று என்று கூறுவதற்கில்லை. தனக்கு ஊறு இழைத்தவர்களை முழுமனத்தோடு மன்னித்தாலொழிய மனத் திலுள்ள காழ்ப்புணர்ச்சி நீங்கிற்று என்று கூறுவதற்கில்லை. மனவியலின் இந்த நுண்மையான தத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்ட அடிகளார், மனத்திலுள்ள காழ்ப்புணர்ச்சியோடு கண்ணகி வீடுபேற்றை அடையமுடியாது என்பதை மனத்துட் கொண்டே வாழ்த்துக் காதையில், - தென்னவன் தீது இலன்; தேவர்கோன் - தன்கோயில் நல்விருந்து ஆயினான் நான் அவன் - தன்மகள் (30-12) என்று பாடியுள்ளார் இவ்வாறு கூறுவதால் கண்ணகி மனத்தில் இறுதியாக தங்கி இருந்த காழ்ப்புணர்ச்சி என்ற மாசும் நீக்கப்பட்டு விடுகிறது. “கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு” (23:182) என்று அத் தேவியார் கூறிக்கொண்டு கொற்றவை வாயிலில் தம் வளையல்களை உடைத்த அந்த நேரத்தில் முற்றிலும் ஆணவ மலத்தில் இருந்த விடுபட்டு விடுகிறார் வறியேன்