பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அ.ச. ஞானசம்பந்தன் பெயர்கு'என்று கூறும் பொழுதே அந்த ஆன்மா முழு விடுதலை பெற்று விட்டதைக் குறிப்பால் பெற வைக்கின்றார் ஆசிரியர் மாசு நீங்கிய பொன்னாக அப் பெருமாட்டி ஆயினார் என்பதை அவருடைய சொற்களிலிருந்தேகூட அறிய முடிகிறது. குன்றத்துக் குறவர்கள் வள்ளி போல்வீர்! யாவிரோ?” (24.4) என்று கேட்டவினாவிற்கு அத் தேவியார் ஒரு சிறிதும் முனியாமல் 'மன மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உறுத்த காலைக் கணவனை அங்கு இழந்துபோந்த கடுவினை யேன்யான்” என்று கூறுகிறார். கணவன் இறப்பு, அரசன் மரணம், மதுரை அழிவு ஆகிய அனைத்துக்கும் வல்வினையே காரணம் என்று உணர்ந்துகொண்டார். இந்நிலையில், மதுரை, அரசு இரண்டும் கேடு உற என்றமையின் அக் கேட்டுக்குத் தாம் எவ்வாற்றானும் காரனர் அல்லர் என்பதையும், கணவனை இழந்ததற்கும் வல்வினை காரணம் என்றமையின் பாண்டியன் அல்லன் என்பதையும் உணர்ந்து பேசினாராகலின் அகங்கார, மமகாரங்களிலிருந்து முழு விடுதலை பெறுகிறார். அந்த நினைவு வந்தவுடன் "வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து. கொண்டு போயினார்” எனக் காப்பியம் பேசுகிறது. .