பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 107 என்று கூறியுள்ளார். அதாவது நகரத்திலுள்ளவர்கள் பெரு மகிழ்ச்சியடையுமாறு இத்திருமணம் நடைபெற்றது என்று கூறுகிறார். மணமகள் மகிழ்ந்தாளா? இத்திருமணத்தை ஏற்றுக் கொண்டாளா? என்று யாரும் கவலைப்பட வில்லை. இரண்டு பெருஞ்செல்வருடைய விருப்பமும் நிறைவேறும் வகையில் திருமணம் நடைபெற்றதாம். இனி காரைக்கால் அம்மையார் திருமணத்தைப் பற்றி பேச வரும் சேக்கிழார் சற்று விரிவாகவும் மணமக்கள் இருவருடைய மனநிலையை விளக்கும் முறையிலும் நான்கு பாடல்கள் பாடுகின்றார். கண்ணகிக்கு வாய்த்த மணமகன் உள்ளுர்க்காரன். புனிதவதியாருக்கு வாய்த்த மணமகன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன். புனிதவதியார் திருமணத்தைக் காண விரும்பி வந்ததைத் தன்னுடைய சுற்றத் தார் அனைவரும் இந்தத் திருமணத்தைப் பற்றி பெருமகிழ்ச்சிக் கொண்டார்கள் என்று பெரியபுராணம் பேசுகிறது. மணமகள், மணமகன் இருவருடைய தந்தைமாரும் சுற்றத்தார்கள் மகிழ்ச்சி யடையும்படி இவ்வதுவைக்கு ஏற்பாடு செய்தார்கள் என்று சேக்கிழார் பேசுகிறார் (பெரிய, காரைக்கால் 9) இதற்கு அடுத்த பாடலில் இன்னும் விளக்கமாகவும் தம் மனத்திலுள்ள குறை வெளிப்படும்படியும் சேக்கிழார் பேசுகிறார். அளிமிடைதார்த் தனதத்தன் அணிமாடத் துள்புகுந்து தெளிதருநூல் விதிவழியே செயல்முறைமை செய்து அமைத்துத் தளிர் அடிமென் நகைமயிலைத் தாது.அவிழ்தார்க் мх காளைககுக களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணம் செய்தார்கள். (காரைக்கால் 11.) இப்பாடலின் இரண்டாவது அடி தெளிதருநூல் விதிவழியே செயல் முறைமை செய்து அமைத்து என்று கூறுவதையும், சிலப்பதிகாரம், .