பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அ.ச. ஞானசம்பந்தன் மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத் திவலஞ் செய்வது காண்பார்கள் நோன்பென்னை (சிலம்பு 52-53) என்றும் பேசுவதிலிருந்தும் இவ்வணிகர் குலமக்கள் நெடுங்கால மாகத் திருமணமுறையில் ஒரே வழியைப் பின்பற்றினர் என்பது அறிய முடிகிறது. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு இவ்விரண்டு திருமணங் களும் எடுத்துக் காட்டுகள் ஆகும். இளங்கோ அடிகள் மாநகர்க்கு ஈந்தார் மணம் என்றும், சேக்கிழார் களிமகிழ் சுற்றம் போற்றக் கலியானம் செய்தார்கள் என்றும் கூறுவது சிந்திக்கத் தக்கது. அதாவது மேட்டுக்குடி மக்களின் வீடுகளில் நடக்கின்ற திருமணங்களில் மனப்பெண்ணின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சுற்றத்தார்களின் மகிழ்ச்சியே முதலிடம் பெறுகிறது என்பதை அறிய முடிகிறது. இவர்கள் இருவருடைய திருமணங்களும் பொருந்தாத் திருமணங்களே என்பதை இவர்களுடைய பின் வரலாறு கற்பிக் கின்றது. இளங்கோவடிகள் அதனை வெளிப்படக் கூறவில்லை யாயினும், சேக்கிழார் மிக அற்புதமான ஒர் உருவகத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார். தளிர் அடிமென் நகைமயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்கு. கல்யாணம் செய்தார்கள் என்றால் மயிலும் காளையும் எவ்வகைப் பொருத்தமும் இல்லாதவை என்பதை நாம் அறிய முடிகின்றது. மயிலின் மெல்லிய நடை மற்றும் பாவனைகளுக்கு முரட்டுத்தனமான காளையின் நடை மற்றும் பாவனைகள் எங்ங்ணம் பொருந்தும்? ஆனாலும் என்ன? கல்யாணம் செய்து வைக்கப்பட்டது என்ற பொருளில் கல்யாணம் செய்தார்கள் என்று பேசுகிறார் சேக்கிழார், இனி, இந்த இரண்டு பெண்களினுடைய மனநிலை, உள்ளத்து உணர்ச்சிகள், குறிக்கோள் என்பவை பற்றி இந்த