பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 111 மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ உலவாக் கட்டுரை பலபாராட்டி (சிலம்பு மனையறம். 77) என்ற முறையில் கண்ணகியிடம் பேசுகிறான். கண்ணகியைப் பொறுத்தவரை இந்த பாராட்டுதலைக் கேட்டு எந்தவிதமான எதிர் நிகழ்வும் (Re-action) ஏற்பட வில்லை என்பதை அடிகள் குறிப்பாகப் பேசுகிறார். உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசு பவனிடம் மறுமொழி ஒன்றும் கூறாது இருத்தல் அவனுடைய மனத்தில் ஒரு நெருடலை உண்டாக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனாலும், கோவலன் இதைப் பெரிதாகப் பாராட்டாமல் சில ஆண்டுகள் கண்ணகியுடன் சேர்ந்தே இல்லறம் நடத்துகிறான். மறப்பருங் கேண்மையோடு அறப் பரிசாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென் (சிலம்பு. மனையறம் 85-90) இவ்வடிகளில் அடிகள் அறவோர்க்களித்தல் துறவோர்க்கு எதிர்தல், விருந்து எதிர்கோடல் ஆகியவை நன்கு நடைபெறு வான் வேண்டி கண்ணகியையும் கோவலனையும் தனிவீட்டில் இருக்கச் செய்தார்கள் என்று பேசுகிறான். இச் செயல்களை கலைஞனாகிய கோவலனும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தான். ஆனால் கண்ணகியோ இவற்றையே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கொண்டிருந்தாள், சில ஆண்டுகள் இவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தார்கள் என்றாலும் அவர்கள் வாழ்க்கைச் சகடம் சரியாக ஓடவில்லை என்பதை அடிகள் குறிப்பால் உணர்த்துகிறார்.