பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அ.ச. ஞானசம்பந்தன் புனிதவதியாரை (காரைக்கால் அம்மையார்)ப் பொறுத்த மட்டில் அவருடைய இளமைப் பருவம் எவ்வாறு கழிந்தது என்பதைச் சேக்கிழார் விரிவாகப் பாடுகிறார். அல்கியஅன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் (4) வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை அண்டர்பிரான் திருவார்த்தை அனையவரு வனபயின்று, தொண்டர்வரில் தொழுது, தாதியர்போற்றத் துணைமுலைகள் கொண்டு நுசுப்பு ஒதுங்குபதம் கொள்கையினில் குறுகினார். (5) புனிதவதியாரின் இளமைக்காலம் ஏனைய செல்வர்கள் வீட்டுக் குழந்தைகளைப் போல அமையவில்லை என்று சேக்கிழார் கூறுகிறார். மிக இளங் குழந்தையாக மணல் வீடு கட்டி விளையாடும் பருவத்திலும் பேச்சு பழகுகின்ற பருவத்திலும் கூட இறைவன் - சிவபெருமானுடைய புகழைப் பேசுவதிலும் அதுசம்பந்தமான விளையாட்டுகளிலுமே அவருடைய இளமைப் பருவம் கழிந்தது என்கிறார் சேக்கிழார். இவ்வாறு சேக்கிழார் கூறுவதற்குக் காரணம் காரைக்கால் அம்மையார் பிற்காலத்தில் பாடியுள்ள பாடலில் வரும் ஒரு குறிப்பேயாகும். பிறந்து மொழி பயின்ற பின்எல்லாம் காதல் சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன் (அற்புதத் திருவந்தாதி) இக் குறிப்பே அம்மையாரின் இளமைப் பருவம் எவ்வாறு கழிந்தது என்பதைச் சேக்கிழார் சிந்திக்க இடந்தந்தது. இறைவன் அருள் நிரம்பப் பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்பது மிகப் பிற்காலத்தில் தமிழகத்தில் புகுந்த தவறான கொள்கைகளில் ஒன்றாகும். இறை உணர்வில் மூழ்கிய அம்மையாரும், கற்பில் நின்று இல்லறக் கடமைகள் நான்கையுமே குறிக்கோளாகக் கொண்ட