பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 119 இனையது.ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என, (24) கூறினான். முதலில் உண்ட பழம் மிக இனிமையாக இருந்தது என்றால், ஒரு சராசரிக் கணவன் என்ன செய்திருப்பான்? நல்ல வேளை இரண்டு மாங்கனிகள் கிடைத்தன. இவ்வளவு சுவை யுடைய பழத்தை அவளுமுண்டு மகிழட்டும் என்றுதானே நினைத்திருப்பபான்? அவ்வாறு செய்யாமல் இதுபோன்ற இன்னொரு பழம் உள்ளது. அதனையும் இலையில் இடுக’ என்று கூறினான் என்றால், ஒரு சராசரி மனிதன் மனைவி யிடம் செலுத்தும் அன்புகூட பரமதத்தனிடம் இல்லை என்பது தெளிவு. உணர்வு வாழ்க்கையால் கண்ணகியிடம் அன்பு செலுத்த மறந்தான் கோவலன், செல்வத்தின்மாட்டுக் கொண்ட விருப்பால் புனிதவதியாரிடம் அன்பு செலுத்த மறந்தான் பரமதத்தன். கண்ணகியைப் பொறுத்தவரை, திருமணத்தில் தொடங்கி சில ஆண்டுகள் வரை இல்வாழ்க்கை நடந்தது என்றாலும், அது அன்பு வாழ்க்கை என்று உறுதியாகக் கூற இயலவில்லை. அதன்பிறகு 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையே இல்லை. இறுதி யாக, மதுரைக்குப் புறப்பட்டதிலிருந்து கோவலன் கொலையுறு கின்றவரை சிலநாட்கள் அதீத அன்பு வாழ்க்கை நடைபெற்றது. பல்லாண்டுகள் இழந்துவிட்ட கனவனின் அன்பை இறுதிச் சில நாட்களில் முழுவதுமாகப் பெற்றுவிட்டாள் கண்ணகி இந்த வாழ்க்கை நீடித்திருக்குமானால், அவள் இப்பிறப்பில் தேவருலகை அடைந்திருக்க முடியுமா என்பது ஐயத்திற்குரியதே. எனவே விதி அவளுடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைத்தந்து அவள் கணவனை இழக்குமாறு செய்து, தேவருலகை அடையச் செய்தது. காரைக்கால் அம்மையாரைப் பொறுத்தமட்டில் இத்தகைய நிலை ஏதும் இல்லை. தொடக்கத்திலிருந்தே கணவன்,