பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அ.ச. ஞானசம்பந்தன் பெறவேண்டுமென்றால் அது பீடு அன்று என்று சொல்லும் போது அவளது நெஞ்சுறுதியும் குறிக்கோள் தன்மை கொண்ட வாழ்க்கையும் அறியப்படுகின்றன. சிலம்பு உள கொண்ம்'என்று சொல்லப்படுகின்றபோது எந்த நிலையிலும் சினங் கொள்ளாத இயல்பையும் இணர் எரி தோய்வு அன்ன இன்னாசெயினும் வெகுளாத மனப்பான்மையும் தனக்கென வாழாத மாபெரும் தியாக வாழ்க்கையும் வெளிப்படுகின்றன. இத்தகைய பண்பு உடையவளான கண்ணகி எப்படி வழக்குரைக்கத் துணிந்தாள் என்ற வினாவை எழுப்பினால் இவளது பண்பாட்டை அறிய மற்றுமோர் வாய்ப்பு கிடைக்கும். கணவன் விரும்பியதைச் செய்வதே தன் கடமை என்று கொண்டிருந்த கண்ணகிக்குச் சோதனைக் காலம் வருகின்றது. முன்பின் தெரியாத ஊரில் மாதரியைத் தவிர வேறு யாரையும் அறியாத சூழ்நிலையில் பேரிடிபோல் கணவன் கொலையுண்ட செய்திபராயரியாகக் காதில் விழுகிறது. அந்த முன் இரவில்தான் இவர்கள் இருவரும் மாதரியின் துணையுடன் ஊருக்குள் புகுந்தனர். அன்று இரவே கொலை நிகழ்ந்து விட்டது. அதிலும் கள்வன் என்று பெயர் சூட்டப்பெற்று கோவலன் கொலையுண்டு இருக்கிறான். இந்த நிலையில் இவள் கணவன் கள்வன் அல்லன் என்று எடுத்துக் கூறுவார் யார்? அதனால்தான் எல்லையற்ற தன் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் கள்வனோ என் கணவன்?’ என்று கேட்கிறார், பெருமாட்டி. இந்நிலையிலும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். கள்வனோ என் கணவன் என்று கேட்கும் பொழுது கதிரவனிடமிருந்து விடை வரும் என்று எண்ணிக் கேட்டாளாகண்ணகி? இவ் வினாவிற்கு ஆம் என்பார் சிலர். ஆனால் பண்பின் சிகரத்தில் நிற்கும் இவர்களைப் பொருத்தமட்டில் இவ்விடை தவறானதாகும். விடை வருமென்று எண்ணி இவ்வினாவை எழுப்பினாள் கண்ணகி என்றால்