பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அ.ச. ஞானசம்பந்தன் பின்னர் பாண்டியனின் கதையை முடிக்க வழிசெய்கிறது. கண்ணகி சென்று வழக்குரைக்கவில்லையானால் பாண்டியன் தான் செய்த தவறை வேறு எவ்வாற்றானும் அறிந்திருக்க முடியாது. அப்பிழை காரணமாக உயிரையும் நீக்க வேண்டிய குழ்நிலை ஏற்பட்டிருக்காது. அதற்காக அவனுடைய விதி இறந்து எழுந்த கோவலன் வாயில் புகுந்து இருந்தைக்க என்று பேசச் செய்தது. சிலம்பின் வழியாக கோவலன் உயிரைக் குடிக்க சதி செய்ய விதி அச்சிலம்பின் வழியாகவே பாண்டியன் உயிரையும் குடித்தது. காரைக்கால் அம்மையாரும் கனவனிடமிருந்து பிரிகின்ற நிலை ஏற்படுகிறது. அப்படிப் பிரிவதற்குக் காரணம் அவருடைய கனவனின் மனமாற்றமே ஆகும். இந்த வரலாற்றிலும் இரண்டாவது பழம் கிடைக்குமென்று உறுதியோடு அம்மையார் செயல்பட்டார் என்று சொல்வது தவறாகும். விடை வருமென்று எதிர்பாராமலே கண்ணகி காய்கதிர்ச் செல்வனை அழைத்தது போல அம்மையாரும் இரண்டாவது பழம் வேண்டுமென்று கணவன் கேட்டவுடன் என்ன செய்வது என்று அறியாமல் மனம் உருகுகிறார். தனியே சென்று இக்கட்டான நிலையில் இறை வனிடம் வேண்டிக் கொள்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இறைவனை வேண்டுகிறார். பழம் வேண்டு மென்று கேட்கவே இல்லை. இறைவன் பழம் தருவான் என்று எதிர்பார்க்கவும் இல்லை. அதுதான் அவரது பண்பாட்டின் சிறப் பாகும். தீர்க்கமுடியாத இச்சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுமாறு இறைவனை வேண்டுகிறார். அந்த நிலையை விளக்க வந்த சேக்கிழார், அம்மருங்கு நின்று அயர்வார்; அரும்கனிக்கு அங்கு - என்செய்வார்? மெய்ம்மறந்து நினைந்த இடத்துஉதவும் விடையவர்தாள்