பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_இளங்கே அடிகள்_சமயம்-எது?-127 தன்மனம் கொண் டுஉணர்தலுமே அவர் அருளால், - தாழ்குழலார் கைம்மருங்கு வந்திருந்தது அதிமதுரக் கனி ஒன்று (காரைக்கால் 25) கற்புக்கடம் பூண்ட இரு தெய்வங்களும் என்ன செய்வது என்று அறியாத நிலையில் இறைவனிடத்தில் முறையிடுகின்றனர். ஒருத்தி கதிரவனிடம் முறையிடுகிறாள். மற்றொருத்தி இறை வனிடம் முறையிடுகிறார். முறை இடுவதுதான் அவர்கள் கடமையே தவிர முறையீட்டிற்கு பலன் கிடைக்கும் அல்லது வேண்டும் என்று நினைப்பது அவர்கள் பண்பாட்டிற்குப் பொருத்தம் ஆகாது. அதே நேரத்தில் அவர்கள் எதிர்பார்க்கா விட்டாலும், அவர்கள் திண்மை, பக்தி என்பவற்றின் பயனாக கண்ணகிக்கு விடையும் அம்மையாருக்குப் பழமும் கிடைக் கின்றன. இதனைப் புரிந்து கொள்வது இறையருளின் துணுக் கத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இக்கட்டிலிருந்து தன்னைக் காக்க வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்பது நம்பிக்கை உடையார் கடமை. அப்படிக் கேட்கும் பொழுது பயன் கிடைக்குமென்று எதிர் பார்த்தார்கள் அல்லது நம்பினார்கள் என்று கூறுவது பொருத்தமற்ற கூற்றே ஆகும். இவ்விருபெரு மகளிரும் தத்தம் கணவன்மார்களை உயர்கதி அடையச் செய்கின்றனர். இரண்டு கணவன்மார்களும் இப்பிறப்பில் உயர்கதி அடையவதற்குரிய தகுதி பெற்றிருந்தார்கள் என்று கூறுவது கடினம். வறுமொழியாளரொடும் வம்பப்பரத்த ரொடும் பொழுது போக்கியவனும் சிறுமுது குறைவிக்கு சிறுமை செய்தவனும் (16-69) ஆகிய ஒருவன் எவ்வாறு உயர்கதி அடைய முடியும் அதேபோல மனைவிக்கு ஒரு பழம் வேண்டும், அவளும் அதை அனுபவிக்கட்டும் என்று கூடக் கருதாத பரமதத்தனுக்கு உயர்கதி எவ்வாறு கிட்டும்? ஆனால் பொன்னொடு சேர்ந்த செம்பும் பொன்னாவது போல கண்ணகியை மணந்ததால் கோவலனும், அம்மையாரை மணந்ததால் பரமதத்தனும் உயர்கதி