பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 129 விட்டமையின் எந்த ஒன்றையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் உண்மைத் தன்மையை அறிய வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. உலகிடைத் தோன்றி வாழும் மக்களுள் ஆடவராயினும் பெண்டிராயினும் மாமனிதராக வாழ்வர் சிலர். மனிதர்கள் மாமனிதராக ஆக வேண்டுமானால் அவர்கள் வாழ்வில் குறிக் கோள் என்ற ஒன்று இருந்தே தீரவேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கையிலும் வேறுபட்ட ஒன்று அன்று. கண்ணகி - காரைக்கால் அம்மையார் என்ற இருவருக்கும் குறிக்கோள் ஒன்று இருந்தது என்பதில் ஐயமில்லை. அது என்ன என்று காண்பதற்கு முன் குறிக்கோளைப் பற்றி ஒர் இரு தகவல் களைக் காணவேண்டும். அவை பிறர் நினைக்க முடியாத ஒன்றாக மிகப் பெரிதாக இருத்தல் வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளை எந்த நிலையிலும் விட்டுவிடாமல் செய்ய வேண்டு மென்பதும் குறிக்கோள்தான் ஒரே பிறப்பில் இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பதும் குறிக்கோள்தான். குறிக்கோள் எது என்பது அவரவரைப் பொறுத்தது ஆகும். கண்ணகியைப் பொறுத்த மட்டில் எந்நிலையிலும் மனந் தளராது உறுதியோடு இருத்தல், கணவன் மனம் நோகும்படி நடவாது இருத்தல் என்ப வற்றோடு அறவோர்க்களித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல் விருந்தெதிர் கோடல் ஆகியவை அவளது குறிக் கோள்களாக இருந்தன. அவை அனைத்திலும் தன்னலம் என்பது ஒரு சிறிதும் இல்லை. தன்னலத்திற்காக சோம் குண்டம் முதலிய வற்றில் மூழ்கி காமவேள் கோட்டம் தொழுது கணவனைப் பெற விரும்பவில்லை. தெய்வமே ஆயினும் தெய்வத்தின் உதவியால் தன்னலத்தை முற்றுவிக்க விரும்பவில்லை 9