பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அ.ச. ஞானசம்பந்தன் அம்மையாரைப் பொருத்த மட்டில் கணவனுக்கொத்த மன வாழ்க்கை நடத்தினார் என்பதில் ஐயமில்லை. மாம்பழக் காட்சி ஒன்றை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது பரமதத்தனுக்கு மனைவிமாட்டு அன்பு சிறந்து ஒழுகியதாகத் தெரியவில்லை. கண்ணகியைப் போலவே அம்மையாரும் இதுபற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் கடுகளவும் குறைந்ததாகவும் தெரியவில்லை. உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள மாபெரும் பக்தராகிய அவர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு கணவன் மனம் கோணாமல் நடந்து கொண்டார் என்பதைப் பெரியபுராணம் அறிவிக்கின்றது. ஆனால் அவருடைய குறிக்கோள் இது என்று சொல்வதற்கில்லை. வாழ்வில் தம்முடைய குறிக்கோள் என்ன என்று அவரே தாம்பாடிய அற்புதத் திருவந்தாதியில் பின் வருமாறு கூறுகிறார். - ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேனன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர் முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது (11) வெவ்வேறாக இருப்பினும் இவ்விருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருந்தது என்பதை அறிய முடிகிறது. ஏறத்தாழ ஒரே மாதிரியான வாழ்க்கை நடத்திய இவ்விருவர் இடையேயும் ஒரேயொரு மாறுதலைக் காணமுடிகின்றது. நகைச் சுவையை ஆக்குவதிலும் அனுபவிப்பதிலும் கண்ணகிக்கு ஈடுபாடு இருந்ததா என்று சொல்வதற்கில்லை. ஆனால் கோவலன் அதனைப் பெற்றிருந்தான் என்று கூறமுடிகின்றது. கலைஞன் ஆனதால் நகைச்சுவை அவன்மாட்டு இருந்தது போலும், காரைக்கால் அம்மையாரைப் பொருத்தமட்டில் நிறைந்த நகைச்சுவை உடையவர். அவருடைய அற்புதத் திருவந்தாதியில்