பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 133 அழகிய சலவைக்கற்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். அப்படிப்பட்ட கற்களை யாரேனும் ஒருவன் கொண்டுவந்து, ஒரிடத்தில், அடுக்கிவைப்பானேயானால், சாதாரண மக்கள் அதனைக் காணும் பொழுது நம்முடைய வீட்டில் குளியலறையில் போட்டால் மிக நன்றாய் இருக்குமென்று நினைப்பர் சிறந்த கலைஞன் ஒருவன் அந்தச் சலவைக் கற்களைப் பார்க்கும் பொழுது தாஜ்மஹாலையோ, அல்லது ராஜராஜேஸ்வர உடையார் கோயிலையோ நிர்மானிக்கலாம் என்று கருதுவான், அதுபோல, வள்ளுவர் அழகான சலவைக் கற்களாக எடுத்துச் சதுரிக்க வேண்டிய தேவையைக்கூடப் பிறருக்கு வைக்காமல் எல்லா வற்றையும் சதுரித்து அடுக்கி வைத்துவிட்டுப் போனார். இளங்கோ அந்தக் கற்களை எடுத்துச் சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார். ஆகவே வள்ளுவனுடைய குறள் போன்ற சலவைக் கற் களைத் தனிப்பட்ட முறையில் அடுக்கி வைத்திருக்கும்பொழுது, விரிந்த கற்பனையின் உயர்ந்த கலை ஞானம் உடையவனுக்குத் தான் இக் கற்களைக் கொண்டு என்ன காரியம் செய்யலாம் என்று தோன்றுமே தவிர, சாதாரணமானவர்களுக்குக் கல்லைப் பார்க்கும்பொழுது ஒன்றும் தோன்றாது தோன்றினாலும் கலையாகத் தோன்றாது. வள்ளுவன், குறள் என்ற சலவைக் கற்களை அடுக்கி வைத்திருந்ததைப் பலரும் கண்டதுண்டு. இத் தமிழ்நாட்டில். அதனை எடுத்துப் பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தவர் ஒருசிலர். அவ்வாறு பயன்படுத்தியவருள்ளும் ஒப்பற்ற கலைக் கோயிலைச் சமைத்தவர் இளங்கோ, காலத்தால் முற்பட்டு நிற்கின்றார் இளங்கோ, அடுத்த கட்டத்தில் நிற் கின்றான் கம்பநாடன், இந்த இருவருக்கும் மூத்த நிலைக் களனாய் அற்புதமான மூலப் பொருளாய் அமைந்த அந்தத் திருக் குறளை, எத்தனைப் பகுதிகளில் வேண்டுமானாலும் இளங்கோ பயன்படுத்தும் முறையைக் காணலாம். -