பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டிய தேவையில்லை. அறிதுயில் அமர்ந்தோன் கோயிலுக்கு அரசன் செல்லவில்லை என்பதே அவன் திருமால் வழிபாட்டில் நாட்டம் செலுத்தவில்லையென்பதை அறிவிக்கின்றது. அவ்வாறு இருந்தும் திருமால் பிரசாதத்தை ஒரு சிலர் கொண்டு சென்று யானை மேல் இருப்பவனுக்குக் கொடுக்க நீட்டினார்கள் என்று கூறுவது ஏன் என்று தெரியவில்லை. கொடுத்தார்கள், மன்னன் வாங்கிக் கொண்டான் என்று பாடிச் சென்றிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் சிவபெருமான் திருவடி, தலைமேல் இருப்பதால் இப்பிரசாதத்தை வாங்கித் தோளில் தரித்துக் கொண்டான் என்று ஆசிரியர்பாடுவது, அவருடைய ஆழ்மனத்தில் சிவபெருமானுக்கு இருந்த சிறப்பை எடுத்துக் கூற இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.


இது இவ்வாறு இருக்க, பதிக ஆசிரியர் பதிகத்தின் முதல் மூன்றடிகளில் இளங்கோவடிகளைக் குறிப்பிடும் முறை எவ்விதச் சான்றும் இல்லாமல் அவருடைய கற்பனை ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு கூறியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


'குண வாயிற் கோட்டத் தரசு துறந் திருந்த

குடக்கோச் சேர லிளங்கோ வடிகட்கு'


அரசு துறந்து இருந்த இளங்கோவடிகள் என்று பதிக ஆசிரியர் கூற வரலாற்றுச் சான்று எதுவுமில்லை. நூலாசிரிய ராகிய இளங்கோவை அரசு துறந்து இருந்தார் என்று கற்பனை செய்த பிறகு பதிகவாசிரியர்க்கு மற்றோர் இடையூறு குறுக்கிடு கின்றது. நகருக்கு வெளியேயுள்ள குனவாயிற் கோட்டத்தில் இளங்கோ இருந்தார் என்று கற்பனை செய்துவிட்ட பிறகு கண்ணகி சேர நாடு வந்த செய்தியும் கொடிமாடச் செங்குன்றில் வானவர் வந்து அவளை அழைத்துச் சென்றனர் என்பதும் இத் துறவிக்கு எவ்வாறு தெரியவந்தது என்ற வினாவிற்கு விடைகூற