பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அ.ச. ஞானசம்பந்தன் கேட்கத் தோன்றுகிறது. கேட்டுப் பயனில்லை. ஒரு சிறிதுகூட நினைக்கவில்லையாம் மன்னன்; நினையாமற் செய்யச் செய்தது அந்த விதி. இதுமட்டுமா? அந்த விதி இன்னும் என்னென்ன வேலை செய்கிறது? காப்பியத் தலைவன் கோவலனை எடுத்துக் கொள்வோம். முதலில் கண்ணகியோடு வாழ்ந்தான், பிறகு, மாதவியோடு வாழ்ந்தான். கண்ணகியோடு வாழுங்காலத்தில் அவள் எத்தகையவள் யாருடைய ஒப்பற்ற ஒரு மகள் என்பதை அறியவில்லையா அவன்? பின்னர் மாதவியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தானே அப்பொழுதெல்லாம் மாதவி யார் என்று அறிய முயலவில்லையா? நூற்றுப்பத்தடுக்கி எட்டுக் கடைநிறுத்த அந்த மாலையை வாங்கும்பொழுது மாதவி இன்ன குலத்தைச் சேர்ந்தவள் என்று அறியவில்லையா? "மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு” என்று மாலை விற்றவள் கூறினாளே, அப் பொழுதாவது மாதவி இன்ன குலத்தைச் சேர்ந்தவள் என்று தெரியாதா? அடுத்து, மாதவியினுடைய வீட்டில் சென்று வாழத் தொடங்கினானே அப்பொழுது அவள் என்ன குலத்தினள் என்று தெரியாதா? தலைக்கோல் அரிவைப்பட்டம் பெற்றவள் ஆயிற்றே, அப்பொழுதாவது மாதவி இன்ன குலத்தினள் என்று தெரியாதா? தெரிந்துதானே அவளுடன் வாழப் போனான். அவள் அந்தக் குலத்தைச் சேர்ந்தவளாக இல்லையெனில் கோவலனுக்கு அங்கு என்ன வேலை? அவ்வாறிருந்தும் கானல்வரிப்பாட்டு முடிந்ததோ இல்லையோ கானல்வரியான்பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்”என்று அவன் பேசக் காரணம் யாது? இவ்வாறு பேசிவிட்டு அவளை விட்டுப் பிரிந்துபோகும் கோவலன்மேல் நமக்குச் சினம் தோன்றுவது இயல்பே. நம்முடைய சினத்தைத் தணிக்குமுகமாக அடிகள், பாண்டியன்மேல் வரும் ஒரு பெரும்பழிக்கு அதிர்ச்சி அடை கொடுத்தாரே அதேபோலக் கோவலனுக்கும் கொடுக்