பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அ.ச. ஞானசம்பந்தன் தான் எனில், அது விதியின் கோளாறேயாகும் என்று நினைக் கிறார் அடிகள். எனவே, வள்ளுவர் குறளில் காணப்பெற்ற இந்த விதிக்குப் பெரியதொரு கலைக் கோயில் எழுப்பி, எந்த எந்த இடங்கள் உயிர் நாடியான இடங்களோ அங்கேயெல்லாம் அந்தக் குறளை எடுத்து வைத்துப் பேசுகிறார் அடிகள், குறளிலே சொல்லப்பட்ட நீதிகளுக்கு இளங்கோவடிகளே பேருரைகள் செய்கின்றவர். எற்றுஎன்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று' என்று ஒரு குறள் பேசுகிறது. அதாவது பின்னர் நினைத்துப் பார்த்து ஏன் இப்படிச் செய்தோம் என்று எண்ணி வருந்தும் காரியங்களைச் செய்யாதே என்றார் வள்ளுவர். முடியுமா? சட்ட நூலில் கூறிய நடை முறைப்படி நாம் நடக்கமுடியுமா? முடியாது என்பதை அறிந்து வழி கூறுவதுதான் வள்ளுவனுடைய பெருமை. தினம்தினம் படித்தாலும் கூடாது என்பவற்றைச் செய்வதுதான் மனித இயல்பு பின்னர் இரங்கும் காரியத்தைச் செய்யக் கூடாது. ஒருவேளை செய்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது? செய்வானேல் மற்று அன்ன செய்யாமை' வேண்டும் என்கிறார். அதாவது தவறிச் செய்துவிட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கொண்டு செய்ய வேண்டியதைக் கவனிக்க வேண்டுமே தவிர, நடந்ததை நினைத்து ஐயோ ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தக் கூடாது. இந்தக் குறளுக்கும் அடிகள் இடம் வகுக்கிறார். கோவலன் மனைவி யுடன் மதுரையில் தங்கிய அன்று இரவு சமையல் செய்து போட்டிருக்கிறாள். சாப்பிட்டவுடன் அவளுடன் மகிழ்ச்சியாகப் பேசாமல் அந்தக் கொஞ்ச நேரத்தையும் மகிழ்ச்சியில்லாமல் செய்து விடுகின்றான் அவன். கடந்தகால வாழ்வு முழுமையும் நினைத்துப் பார்க்கின்றான். - -