பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 145 “மைஈர் ஒதியை, வருக'எனப் பொருந்தி, 'கல்.அதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந் கொல்லோ மடந்தைமெல் அடி'என, வெம்முனை அரும்கரம் போந்ததற்கு இரங்கி "எம்முது குரவர் என்உற் றனர்கொல்? மாயம்கொல்லோ? வல்வினை கொல்லோ? யான் உளம் கலங்கி யாவதும் அறியேன், வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்கு, பொச்சாப் புண்டு, பொருள்உரை யாளர் நச்சுக்கொன் றேற்கு நல்நெறி உண்டோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்; வழுஎனும் பாரேன்; மாநகர் மருங்குஈண்டு எழுகஎன எழுந்தாய்; என் செய்தனை' (16; 55–70) உறுதிப்பாடற்ற கோவலன் மனநிலை இங்கு வெளிப்படுகிறது. எவ்வாறு மாதவியினுடைய பாட்டைக் கேட்டுத் தவறாகப் பொருள் செய்துகொண்டு ஓடிவந்தானோ, அதேபோல்தான் இங்கேயும் தன்னுடைய சென்ற கால வாழ்வை நினைந்து பார்க் கிறான். மிகக் கேவலமான வாழ்வு நடாத்திய யான் மதுரை செல்ல முடிவெடுத்து எழுக என எழுந்தாய் என் செய்தனை? என்று கேட்கிறான். இவ்வாறு பேசுவதால் அப் பெருமாட்டி எத்துணைத் தூரம் வருந்துவாள் என்றுகூட அவன் சிந்திக்க வில்லை. தவறுகள் இழைத்த அவன் அவற்றிற்காக ஒரளவு பச்சாதாபப்பட்டு வருந்துவது சரிதான், ஒயாமல் அதை நினைந்து வருந்துவதும் தன்னிரக்கம்'(Self-pity) கொள்வதும் சிறப்பன்று. எற்று என்று இரங்கும் காரியத்தைச் செய்துவிட்டு ஒயாமல் அது பற்றி நினைந்து வருந்துகிறான் கோவலன். இளங் கோவடிகள் தன் இரக்கம் உடைய இந்தப் பாத்திரத்தை வடித்துக் காட்டுகிறாரே அதுபோல ஷேக்ஸ்பியரின் ரிச்சர்ட் II நாடகம் அமைந்துள்ளது. தன்னுடைய குறைபாட்டைப் 10