பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அ.ச. ஞானசம்பந்தன் பெரிதுபடுத்தி அதை ஒயாமல் சொல்லிச் சொல்லி அனுபவித்துக் கொண்டிருக்கும் பாத்திரம் ரிச்சர்ட் கோவலன் போன்ற பாத்திரம் ஏனைய நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவனாய் இருந்தும் இக் குறைபாட்டைப் பெற்றிருந்ததற்காகக் குறை சொல்லவில்லை, இரக்கங் காட்டுகிறோம். இந்த இரக்கத்திற்குப் பாத்திரமாக அவன் ஆனதும்கூட, வள்ளுவனுடைய குறளை வைத்துத்தான் என்பதை மறந்துவிட வேண்டா, இனி, கண்ணகியினுடைய கற்பைப்பற்றிக் காணலாம். 'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு" வள்ளுவன் காலத்தில்கூட உழைப்பாளி களும் உழைக்காதவர்களும் இருந்திருப்பர்போலும் அதை அவர் பார்த்திருக்கிறார். உழைக்கின்ற பண்பாடுடையவன் குடும்பத் தலைவன். உழைக்கின்றவன் உழைத்துக்கொண்டே இருப்பான். அந்த உழைப்பால் கொழுக்கிறவன் கொழுத்துக்கொண்டே இருப்பான். துன்பப்படுவதற்கென்றே பிறந்தானா இவன்? ஏன் இப்படி உழைக்கின்றான். குடும்பத்தைக் குற்றம் மறைப்பதற் காகவே, பலரை வைத்துக் காக்க வேண்டுமென்ற கடப்பாட்டை மேற்கொண்டுவிட்டானானால், தன்னுடைய கடமையைப் பெரிது என்று நினைத்துவிடுவானேயானால், தன்னுடைய இன்பத்திற்கு அங்கு இடமே கிடையாது. இவன் இன்பத்தை நாடினால், ஏனையோர் துன்பத்தில் உழல நேரிடும் அவர்கள் இன்பமாக வாழவேண்டும் என்றால் இவன் உழைத்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை. மனிதர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கிறோம்; இப்படித் துன்பத்தைப் பெரிதுபடுத்துகிறவர்களும் உண்டு. இதன் எதிராகக் கண்ணகி வாய்திறந்து எங்கேயாயினும் தன்னுடைய துன்பத்தைப் பெரிதெனக் கூறியதுண்டா? மாமனார், மாமி யாரிடத்திலும் தன்னுடைய துன்பத்தைச் சொல்ல மாட்டாள். அவர்களே அவள் புன்சிரிப்பைக் கண்டு வருந்தினார்களாம்.