பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 149 பெண் என்பன போன்ற குறள்களையெல்லாம் தனித்தனி நிகழ்ச்சிகளில் வைத்துப் பார்க்கும் பொழுது, குறளை எவ்வளவு தூரம் பயன்படுத்தியிருக்கின்றார் இளங்கோவடிகள் என்பதை நன்கு காணமுடியும். இரண்டு கண்களும் ஒன்றையே காணும் முறையில், ஒன்றுக்குப் பேருருரையாக மற்றொன்று அமைந் திருக்கிறது என்பதைத்தான் காண்கிறோம். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணி அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை' என்ற குறளைப்பற்றி அறிவோம். இக் குறளையும் இளங்கோ நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம். அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தன் நோய்போல் போற்றாக்கடை என்பது ஒரு குறள். இன்றைக்கு நாம் அறிவு' என்ற சொல்லால் எதனைக் கூறுகிறோமோ அதனை வள்ளுவர் குறிப்பிடவில்லை. அவர் கூறுவது வேறு. இங்கே அறிவு என்பதற்குப் பண்பாடு என்று பொருள் கொள்ளவேண்டும். ஆராயும் அறிவு எனப் பொருள் கொண்டாலும் சரியே. பிற உயிர்கள் துன்புறுகின்றன. அந்தத் துன்பத்தைக் காணுகின்றான் ஒருவன். வயிற்று வலியினால் துடிக்கிறார் அவர் நான் என்ன பண்ணமுடியும். வாங்கிக் கொள்ளமுடியுமா?’ என்கிறார் அதனைக் காணுபவர் இவ்வாறு கூறுபவர் தீர்க்கக் கூடியதாக இருந்தால் பகிர்ந்து கொண்டு தீர்க்கிறேன். தீர்க்கக்கூடாததாக இருந்தால் என்ன செய்யமுடியும்?”என்ற பொருளில் பேசுகிறார். இப்பொழுது என்னசெய்ய முடியும்? எல்லா நாட்டிலேயும் இருந்தல் ஒரு பெரிய பிரச்சினைதான் இது. பிறருடைய துன்பத்தைப் போக்கவேண்டுமென்று வள்ளுவர் சொல்லிவிட்டால் போதுமா? பிறருடைய துயரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் பண்பாடு அன்று அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை"-அறிவில்லாதவனுக்கும் இருக்கிற வனுக்கும் என்ன வேறுபாடு? பிறர் நோய் என்று சொல்லவில்லை;