பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அ.ச. ஞானசம்பந்தன் பிறிதின் நோய் என்கிறார். அஃறிணைக்கும் உயர்தினைக்கும் வள்ளுவனுக்கு நன்றாக வேறுபாடு தெரியும். வேண்டுமென்றே தான்பிறிதின் நோய் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பிறர் நோய் என்றால், மக்கள் படும் துன்பத்தைமட்டும் கவனித்துப் பிற உயிர்களுக்கு வருகின்ற துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் விட்டுவிடுவான். பிற அஃறிணை உயிர்களுக்கும் உள்ள துன்பத்தைக் கண்டு நீ பொறுத்துக் கொண்டிருப்பாயேயானால், அறிவு பெற்றுப் பயன் என்ன என்கின்றார். அப்படியானால், அந்தத் துன்பம் போக்கக் கூடியதாக இருந்தால் போக்கலாம்; போக்க முடியாததாக இருந்தால் என்ன செய்வது? பசி என்று வருகிறான் ஒருவன். நான் வயிறு நிறைய உண்டுவிட்டேன். சோறு இருந்தால் கண்டிப்பாகப் போடவேண்டியதுதான் அதில் தவறே கிடையாது. இல்லையானால் என்ன செய்கிறது? இருந்தால் போடலாம்; இல்லாதபோது? சரி வடித்துப்போடு என்கின்றார் வள்ளுவர். நம்ம வீட்டிலே அரிசியே இல்லை என்றால் கடன் வாங்கிப் போடு என்கின்றார். இது தமிழ்நாட்டுப் பண்பாடு, அதனால்தான் இளையான்குடிமாறர் விருந்தினரைக் கண்டவுடன் கடன் வாங்கிப் போடவேண்டியது கடப்பாடு என்று எண்ணுகிறார். தன்னை மாறி இறுக்க உள்ளன. கடன்கள்” பெற்றுவிட்டார். எல்லாவற்றையும் அடகுவைத்தும் வாங்கியா யிற்று. இந்தமாதிரிச்சூழ்நிலையிலேயும் கடமையை விடக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டுப் பண்பாடு என்ன செய்வது? வயலில் போட்டிருக்கிற விதையைப் போய் அள்ளிக்கொண்டு வருகிறார். இந்நிலையை எடுத்துக்கொண்டு பார்ப்போமேயானால், பிறருடைய துன்பத்தைப் போக்கமுடியாத நிலைதான். அப்படிப் போக்க முடியவில்லையானால் அந்த நிலையைச் சமாளிக்க ஒரு சட்டம் சொன்னான் இந்த நாட்டுக்காரன், போக்க முடியவில்லை என்றால் நீயும் அந்தத் துன்பத்தை உடன் பங்கிட்டு அனுபவிப்பா