பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அ.ச. ஞானசம்பந்தன் "தேரா மன்னா செப்புவது உடையேன், என்அறு சிறப்பின் இமையவர் வியப்ப புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும், வாயில் கடைமணி நடுநாநடுங்க, ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்உணர், ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ்கழல் மன்னா, நின்நகர்ப் புகுந்து, இங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பிால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே' இங்கே தன்னடக்கத்தையும் புறநானூற்றுப் பாடல் கவிஞனைப் போல இப் பெருமாட்டி கணவனுடைய புகழைப் பாடுகின்ற நிலைமையிலே தற்புகழ்ந்தாளாகாமையையும் காட்டினார். வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' என்பது இந் நாட்டு நீதி இதனைப் பின்பற்றிய கண்ணகியார் தம்முடைய கணவனுடைய குடும்பத்தைத் தவிர, தம்முடைய குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அதிலேயும் ஒரு சிறப்பைக் காண்கின்றோம். அப்படிப்பட்ட கோவலன் அவ்வளவு உயர்ந்தவனாக இருப்பானேயானால், இங்கே ஏன் வரவேண்டும் என்ற வினாவை எதிர்நோக்கி அழகாக ஊழ்வினை துரப்ப” என்றாள். மறுபடியும் குறள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழ்வினை துரப்ப என்ற தொடரில் துரப்ப என்ற சொல்லுக்கு ஒர் அற்புதமான பொருள் உண்டு, துரப்ப என்றால் விரும்பாத பொழுதும் கழுத்தைப் பிடித்து நெக்குவது என்று பொருள். சாதாரணமாக இழுப்பது வேறு கழுத்தை பிடித்துத் தள்ளுவது வேறு வாஎன்று ஒருவர் இழுத்தால் வரமுடியாது என்று எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்துப் பார்க்கலாம். கழுத்தைப் பிடித்துத்