பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அ.ச. ஞானசம்பந்தன் வள்ளுவன் குறளின் அடிப்படையாய நோக்கம் என்பதும், அங்ங்ணம் அவன் குறிப்பிட்டு அழுத்தமாகச் சொல்லிய அனைத்தையும் தம்முடைய பெருங் காப்பியத்தில் கொண்டு வந்து தந்திருக்கின்றார் இளங்கோ என்பதும், மனிதனுடைய வாழ்வில் எங்கே போராட்டம் நிகழ்கின்றதோ அங்கேதான் சட்டத்திற்குத் தேவை என்பதும் சாதாரண அமைதி வாழ்க்கையில் சட்டம் தேவையில்லை என்பதும், நம்முடைய வாழ்க்கையில் போராட்டம் நிகழும்பொழுதெல்லாம் இதன் முடிவு என்ன என்று நாம் விசாரிக்கும்பொழுது திருக்குறளில்தான் விடை காணமுடியும் என்பதும், அந்தச் சட்ட்த்தின் நுணுக்கம் புரியாதபொழுது சிலப்பதிகாரத்தை எடுத்துப் புரட்டுவோமேயானால் வாழ்வின் செம்மையான நெறி எது என்பதை நாம் அறிந்து கொள்ளக்கூடும் என்பதும் நன்கு விளங்கும். இந்த இரண்டும் தமிழனுக்குமட்டும் அல்லாமல் உலகம் முழுவதற்கும் இரண்டு கண்ணாக அமையக் கூடுமென்பது மனத்தில் இருத்தவேண்டும். 다. 다 다