பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அ.ச. ஞானசம்பந்தன் குணவாயிற் கோட்டத்திற்கு ஏன் வரவேண்டும்? அங்கே தங்கி யிருந்த தம்பியிடம் இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டும்? சற்றும் பொருத்தமில்லாமல் இவன் கூறும் பதிகத்தை இதுவரை ஆராய்ச்சியாளர் அனைவரும் வேதவாக்கு என ஏற்றுக் கொண்டது வேடிக்கைதான். இப்பதிக ஆசிரியன் இந்நிகழ்ச்சியை இதனோடு நிறுத்த வில்லை. ஏனென்றால் யார் எவர் என்று தெரியாத ஒரு பெண் மணி தேவருலகம் சென்றாள் என்று கூறுவதை வைத்துக் கொண்டு இளங்கோ என்ன செய்திருக்க முடியும்? துறவியாகிய அவர் மன்னனிடம் சென்று கேட்டார் என்று கூறினாலாவது பொருத்தமாக இருக்கும். அவை அனைத்தையும் விட்டுவிட்டு குன்றக்குறவர் வருகையை அப்படியே ஏற்றுக் கொண்டது போல, தண்டமிழ் ஆசான் சாத்தனையும் ஏற்றுக் கொள்கிறார். குறவர் உரையைக் கேட்ட இளங்கோ ஒன்றும் புரியாமல் விழிக்கையில் வழக்கம்போல நினைத்த இடத்தில் தோன்றும் நாரதரைப் போல, தண்டமிழாசன் இங்கேயும் வருகிறார். அது மட்டுமல்லாமல் அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் - (பதிகம் 10-11) என்ற முறையில் கண்ணகியின் வரலாற்றை ஆதியிலிருந்து சொல்வதாகப் பதிகம் அமைகிறது. காட்சிக் காதையில் வரு வதை அப்படியே எடுத்துக் கூறுவதோடு பதிக ஆசிரியர் நிற்க வில்லை, தனக்கு இவ்வரலாறு எவ்வாறு தெரியும் என்பதையும் கண்ணகிக்கும் மதுராபதித் தெய்வத்திற்கும் இடையே நடந்த உரையாடலையும் சாத்தன் பேசுகிறான். மதுரையே தீப் பற்றி எரியும்போது, தான் வெள்ளியம்பலத்துத் துஞ்சிக் கிடந்த தாகவும் அந்நிலையில் இதனையறிந்ததாகவும் சாத்தன் கூறு கிறான். இது பதிக ஆசிரியருடைய கைவண்ணம்.