பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 21 அடைந்தாள் என்றும் ஆசிரியர் பேசுகிறார். புறப்பட்ட அவளுக்கே எங்கே போகிறோம் என்று தெரியாது. கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும்பகலு மயங்கினள் கையற்று உரவுநீர் வையை யொருகரைக் கொண்டாங்கு நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யான் என்று ஏங்கி ஏழு நாள் இரட்டி எல்லை சென்றபின் தொழு நாள் இது எனத் தோன்ற வாழ்த்தி கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான வூர்தி ஏறினள்... (கட்டுரை காதை 181-199) காப்பியத்தில் வரும் இவ்வடிகளிலிருந்து மதுராபதித் தெய்வம் கூறிய பதினான்கு நாட்களும் ஊண் உறக்கமின்றி ஒய்வென்பதே இல்லாமல் நடந்தே சென்று நெடுவேள் குன்றத்தின் உயரத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் மேலே ஏறி நின்றாள் என்று ஆசிரியர் பேசுகிறார். சாத்தன் மதுரை எரியும் பொழுது அவ்வூரில் இருந்தான் என்று கூறுவதானால் கண்ணகி சென்ற வழியை அவனும் பின்பற்றி வந்து அதே பதினான்காவது நாளில் செங்குட்டுவன் கூட அவள் அமர்ந்திருந்தான் என்று சொல்ல வேண்டி வரும். இது நடக்க முடியாத காரியம். இந்த நுணுக்கத்தைக் காப்பியப் புலவர் நன்கறிந்திருந்தார் ஆதலின் சாத்தன் மதுரையில் இருந்த கதையை அவர் கூறவேயில்லை. இதை நன்குணராத பதிக ஆசிரியன் காப்பியப் புலவர் கூறாது விட்ட பகுதியை தாம் இட்டு நிரப்புவது போல் வெள்ளியம்பலத்து