பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 23 முரண்பாடுகளின் மொத்தவுருவமாகவும், பொருத்தமற்ற கருத்துகளைத் தாங்கி நிற்கும் பாடலாகவும் அமைந்துள்ளது பதிகம் ஆழ்ந்து சிந்தித்தால் நூலையும் நூலாசிரியனையும் நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டிய கடப்பாடுடைய பதிகம் அதற்கு நேர்எதிரான செயல்களைச் செய்து கற்பவர் உள்ளத்தில் குழப்பத்தையே நிலைக்கச் செய்கிறது. பதிகம் அடிபட்டால் நெஞ்சை அள்ளும் சிலம்பை இசைத்தவர் குணவாயிற்கோட்டத்து அரசு துறந்திருந்தவர் சேரன் தம்பி இளங்கோ என்பதும் நிலை பெற முடியாமல் போய்விடும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இக்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் எச்சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை நடுநிலையில் நின்று புதிதாக ஆய்வது பயனுடையதாகும். முன்னரே குறிப்பிட்ட படி சிவபெருமான், திருமால், முருகன், அருகன், பலராமன் ஆகிய தெய்வங்களை இவர் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்று கண்டோம். பாத்திரங்கள் வாயிலாக வரும் தெய்வம் பற்றிய குறிப்புக்கள் கணக்கில் எடுக்கப்படக் கூடாதவை. இந்த அடிப்படையை மனத்திற் கொண்டு நூலில் புகுந்தால் வேட்டுவ வரி ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்ற மூன்றும் நம் கண் முன் வரு கின்றன. இம்மூன்றிலும் முறையே கொற்றவை, கண்ணன், முருகன் ஆகிய தெய்வங்கள் முன்னிலைப் பராவலாகவும், படர்க்கைப் பராவலாகவும் புகழப் பெறுகின்றன. இப்பகுதிகள் அமைந்துள்ள இடங்கள் காப்பியக் கட்டுக்கோப்பில் எவ்வாறு பொருந்துகின்றனன என்று பார்ப்பது நலம் பயக்கும். நடுவே உள்ள ஆய்ச்சியர் குரவை காப்பியத்துடன் முற்றிலும் ஒருங் கிணைந்து அக்கட்டுக்கோப்பிலிருந்து பிரித்தெடுக்க முடியாத நிலையில் அமைந்துள்ளது. ஆய்ச்சியர் குரவையை எடுத்து விட்டால் காப்பியம் மேலே தொடரமுடியாது. இவ்வளவு முக்கிய மான ஆய்ச்சியர் குரவையில் பெருமளவிற்குக் கண்ணனும் ஒரளவிற்கு இராமனும் இந்த இரண்டு அவதாரங்களுக்கும் மூலமான ரீமன் நாராயணனும் புகழப்படுகின்றனர். -