பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 33 இலக்கணங்களையும் பெற்றவளாகவும் சிவபெருமானின் இடப்பக்கம் உறைபவளாகவும் பேசப்படுகிறாள். சங்கப் பாடல்களிலிருந்து கொற்றவை பெற்ற வளர்ச்சியைச் சிலம்பில் கான முடிகிறது. மதுராபதித் தெய்வம் என்று அடிகள் கூறும் தெய்வமும் உமையொரு பாக வடிவத்தையே வருணிப்பதாக உள்ளது. மதுராபதித் தெய்வம் என்று கூறியவுடன் ஊர்க்காவல் செய்யும் சிறு தெய்வம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அடிகள் அவ்வளவு விரிவாக வருணனை பேசுகிறார். கட்டுரைக் காதையில் முதல் அடிமுதல் 13 ஆம் அடி வரைஉள்ள பகுதிகளிலும் விளக்கமாகப் பேசப்பெறும் மதுராபதித் தெய்வ வருனனை சிந்தனைக்குரியது. இறைவியின் தொன் மைக் கோலத்தின் முழு வருனனையாகும் இது, மேலும் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் (கட்டுரை காதை 11 -13) என்ற அடி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். பாண்டியர்கள் தம்மைச் சந்திர குலத்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மரபு பிற்காலத்தில் தோன்றிவிட்டது. ஆனால் தடாதகைப் பிராட்டி என்ற பெயருடன் பாண்டியனுக்கு மகளாகப் பிறந்து பின்னர் அவளே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்று திருவிளையாடற் புராணம் கூறுதலின் இக்கதை மிகப் பழமை யானதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தடாதகைப் பிராட்டி சொக்கப் பெருமானை மணந்து உக்கிரகுமார பாண்டியன் என்னும் மகனையும் பெற்று பாண்டியர் குல முதல்வி யாக விளங்கினாள் என்றும் திருவிளையாடற் கதைகளின் முன்னோடியாக அமைந்துள்ளது பொதியில் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின்' என்ற தொடர் எனவே மதுராபதித் தெய்வம் என்று அடிகள் குறிப்பிடுவது அங்கயற்கண் அம்மையையே என்பது தெளிவாகும்.