பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அ.ச. ஞானசம்பந்தன் பகல் செல் வாயிற்படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தென்று என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி (வரந்தரு காதை 170-184) மேலே கண்ட அடிகளின் பொருளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 'கண்ணகியை வழிபட்ட வேள்விச் சாலையிலிருந்து செங்குட்டுவன் முதலானோர் போன பின்னர் (170), நான் உள்ளே சென்றேன். என் முன்னர் (171) கண்ணகித் தெய்வம் அவளுடைய தோழியாகிய தேவந்திகை மேல் வந்து தோன்றிற்று (172), வஞ்சி மாநகரில் கொலு மண்டபத்தில் (173) தந்தையின் திருவடி நிழலில் இருந்த உன்னைப் பார்த்து (174) அரசனாகக் கூடிய விதி உனக்கு இருக்கிறது. (175) என்று. கூறியவனை (நிமித்திகனை) மிக்கக் கோபத்துடன் பார்த்து (175) மனம் நிறைந்த மலர் மாலையணிந்தவனும் கொடியோடு கூடிய தேர்ப் படை உடையவனும் (177) ஆகிய செங்குட்டு வனுடைய மனத்துயரம் நீங்கும் படியாக (178) குணவாயிற் கோட்டத்துச் சென்று அத் தெய்வத்தின்முன் (179) இந்த பூமியையாளும் செல்வத்தை அறவே துறந்து (180) வாக்கு மனம் கடந்து நிற்கின்ற (181) முடிவில்லாத இன்பமாகிய துறக்கத்தைப் பெற்ற வேந்தனே' என்று (182) எனது இறந்தகாலம் எதிர்காலம் என்ற இரண்டையும் கூறிய (183) நல்ல மொழி பேசும் தகைமை சார்ந்தவள் கண்ணகி (184). .