பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 43 வேண்டும். அம்முயற்சியின் பலனாகவே ஐம்பெருங்காப்பியம் என்ற ஆட்சி வந்திருக்க வேண்டும். சமண சமயத்திற்கு மூன்று நூல்கள் தேவைப்பட்டபொழுது சிலப்பதிகாரத்தை இத்தொகுப் பினுள் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் பதிகம் பாடிய ஆசிரியர் போன்ற ஒருவர் இதனைச் செய்திருக்க வேண்டும். முன்பின் ஆராயாமல் தம் கருத்தை நிறைவேற்ற முயன்றதால் முயற்சி வெற்றியடையாமல் போய்விட்டது. அது ஒரு புறம் இருக்க சிலப்பதிகாரத்தை, ஐயர் அவர்கள் வெளியிட்ட 1892 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இக்கதைகளை நம்பிக்கொண்டு அடிகளைச் சமணர் என்றும் சிலம்பைச் சமணக் காப்பியம் என்றும் நம்பியே பல ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டு வந்தன. இதற்கிடையில் என் மனத்திடைத் தோன்றிய சிலப்பதிகாரம் பற்றிய சில ஐயப்பாடுகள் சில வினாக்கள் ஆகியவற்றை எதிர்மறை உடன்பாடு ஆகிய முறை களில் பல நாட்கள் சிந்தித்ததன் பயனாக மேலே கூறப்பெற்ற முடிவுகளுக்கு வந்தேன். அவையனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை என்றோ, அவைதாம் உண்மை என்றோ நான் சொல்ல வரவில்லை. இப்புதிய சிந்தனைகளை ஒதுக்கிவிடாமல் அறிஞர்கள் காய்தல், உவத்தல் அகற்றி இதுபற்றி மேலும் சிந்திக்க வேண்டுகிறேன். இப்புதிய முடிபுகள் தவறானவை என்று கண்டால் அருள் கூர்ந்து எனக்கு அறிவிக்க வேண்டுகிறேன். நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு கருத்தை, பலரும் ஏற்றுக் கொண்ட ஒன்றை, மறுப்பது கடினம் என்பதை அறிவேன், என்றாலும் இப்புதிய சிந்தனைகளை தமிழகத்தில் உலவவிடு வதன் மூலம் அறிஞர்கள் மேலும் இது பற்றிச் சிந்திக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற கருத்தில்தான் இதனை வெளி யிடுகிறேன். - இளங்கோ அடிகள் சமயம் எது? என்ற வினாவுக்கு வருவதற்கு முன்னர் இந்தச் சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் தலைவி கண்ணகி எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள்