பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 45 தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை' என்கிறார். சப்தபதி செய்வதைச் சொல்கிறார். இம்மாதிரித் திருமணமுறை சமனப் பெருமக்களுக்கு என்றுமே இருந்த தில்லை. தீ வளர்த்துத் திருமணம் செய்வது கூட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தான் சமணர்களுள் ஒரு சிலர் மேற்கொண்டிருக்கிறார்களே தவிர தீ வளர்த்து, அதனைச் சுற்றி வந்து திருமணம் செய்வது என்பது சமணர்களுக்கு இல்லாத ஒரு பழக்கமாகும். அதுமட்டுமல்ல 'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என்று நூல் பேசுகின்றது. ஆக இந்து சமயத் திருமணங்கள் என்று சொல்கிறோமே, அதாவது இந்து மக்கள் வேத அடிப் படையில் செய்துகொள்கிற திருமண அடிப்படையிலேதான் கோவலன், கண்ணகி திருமணம் நடைபெற்றது என்று நூல் பேசிச் செல்கிறது. அப்படித் திருமணம் செய்து கொண்டவர் களைச் சமணர்கள் என்று சொல்ல முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இனி இதற்கடுத்தபடியாக அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டே செல்கிறோம். அவர்களது சமயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை நூலில் ஏற்படவேயில்லை. ஒர் இடம் மாதவியைப் பிரிந்த கோவலன் கண்ணகியோடு காட்டின் வழியே போய்க் கொண்டிருக்கிறான். கவுந்தி அடிகளும் உடன் செல்கிறார்கள், போகும்போது வனதேவதை ஒன்று அவனுடைய அழகில் ஈடுபட்டு அவனை மயக்கிப் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கிறது. அவன் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, கோவலனுக்குத் தெரிந்த வசந்த மாலை வடிவத்தில் - மணிமேகலை பிறப்பதற்கு முன்னர் மாதவிக்குத் தோழியாக இருந்த அந்த வசந்தமாலையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு - வருகிறது. (மதுரைக் காண்டம் காடுகான் காதை 173)