பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அ.ச. ஞானசம்பந்தன் ஏனென்றால் அது கோவலனுக்குத் தெரிந்த வடிவம். அந்த வடிவத்தை எடுத்துக் கொண்டால் அவனுடன் தொடர்பு கொள்ள லாம் என்று அந்த வனதேவதை நினைப்பதற்கு அதுவும் ஒரு காரணம், வந்தது. ஆனால் அறிவில் மிகுந்தவனாகிய கோவலன் சிந்திக்கிறான் : நாம் பல நாட்கள் நடந்து இந்த இடத்திற்கு வந்திருக்க இவள் எப்படி இந்தக் காட்டிற்கு வர முடிந்தது? ஒரு வேளை இது வருத்தும் சிறு தெய்வங்களின் திருவிளையாடலாக இருக்குமோ?” என்று நினைந்து மந்திரம் சொன்னான். என்ன மந்திரம் சொன்னதாக இளங்கோவடிகள் பேசுகிறார் பாய்கலைப் பாவை மந்திரம் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் (காடுகாண் காதை 197). பாய்கலைப் பாவை என்பது கொற்றவைக்குரிய பல பெயர்களுள் ஒன்று என்று அறிய வேண்டும். பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின் உடனே அந்தத் தெய்வம் தன்னுடைய புதிய வடிவத்தை விட்டு விட்டு r வனசாரிணி யான், மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையாது ஏகு என்றேக (காடுகாண் காதை 198-200) "வன சாரிணி நான் இந்த வனத்திலே சுற்றிக்கொண்டிருக் கின்ற சிறு தெய்வம், உன்மாட்டுக் கொண்ட ஆசையினாலே இந்த வடிவத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். நான் இப்படி வந்து உன்னை மயக்கப் பார்த்தேன் என்பதைக் கண்ணகி யிடத்தும், கவுந்தி அடிகளிடத்தும் சொல்ல வேண்டா” என்று சொல்லிவிட்டு அது மறைந்து போகிறது. இந்த இடத்தில் கொஞ்சம் நன்கு சிந்திக்க வேண்டும். ஆபத்து என்ற ஒன்று வருமேயானால் மனித மனம் எங்கே போகிறது? அவன் மரபு வழி எந்தச் சமயத்தைப் பின் பற்றியிருந் தானோ, எந்தக் கடவுளை வழிபட்டுப் பழக்கமுடையவனோ,