பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 47 அந்தக் கடவுளின் பெயரைத் தானே சொல்லுவான்? கோவலன் சமணன் ஆக இருந்திருப்பானேயானால் பாய்கலைப் பாவை' மந்திரத்தைச் சொல்லுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா? திடீரென்று ஒரு மந்திரத்தைச் சொல்லி விடுவதனாலே பயன் ஏற்பட்டுவிடுமா? இந்தப் பாய்கலைப் பாவை மந்திரம் சொன்னவுடனே வனசாரிணி நான். மயக்கம் செய்தேன். என் தவற்றை மன்னித்துவிடு' என்று அந்தத் தெய்வம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டுமானால் அந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னவுடன் அதற்குரிய பலனை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு, அவன் பலகாலம் அந்த மந்திரத்தை உருவேற்றியிருக்கிறான் என்பது சொல்லாமலே பெறப்படும். ஆக, கோவலன் சமணன் ஆக இருந்திருப்பானேயானால் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் திருமணம் செய்து கொண்டு ஆபத்தான சந்தர்ப்பம் வந்தபோது மட்டும் பாய்கலைப்பாவை மந்திரத்தைச் சொல்லி யிருப்பானா? சிந்திக்க வேண்டும். அடுத்து, கவுந்தி அடிகளிடத்தில் இருந்து கோவலனையும், கண்ணகியையும் மாதரி என்ற இடைக்குல மடந்தை அழைத்துச் செல்கிறாள். கோவலன் கண்ணகி இருவர்க்கும் ஒரு தனி வீடு அமைத்துக் கொடுத்து இருவரும் நீராடிய பின்னர் கண்ணகி சமைப்பதற்குரிய பல பாத்திரங்களையும், காய்கறி முதலிய வற்றையும் தருகிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் மூல நூலில் காணப்பெறும் ஏழு அடிகள் ஆராய்ச்சிக்குரியன. மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும் மகனார்க்கினிச் சாவக நோன்பிகள் அடிகளாதலின் நாத்தூண் நங்கையொடு, நாள் வழிப் படுஉம் அடிசி லாக்குதற்கு அமைந்த நற் கலங்கள் நெடியா தளிமின் நீர் .... (கொலைக் களக்காதை 15-21)