பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 49 என்பது முன் இரண்டடி. வழியில் வந்த களைப்பு நீங்க, பாதுகாப்பான ஒரு இடத்தில் மாதரி அவர்களைத் தங்கச் செய்தாள். அடுத்து நோதக வுண்டோ நும்மகனார்க் கினி' என வரும் அடியோடு நாத்துரணங்கையொடு நாள் வழிப் படுஉம்' என்ற அடி தொடர வேண்டும். ஆனால் சாவக நோன்பிகளடிகளாதலின் என்கிற ஒரேஒரு அடி குறுக்கே வருகிறது. சாவக நோன்பிகள் என்று சொல்வதன் மூலம் அவர்களைச் சமணர்கள் என்று நினைக்கும்படியாகச் செய்திருக்கிறார்கள். கோவலன் கண்ணகியைப் பொறுத்தமட்டில் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதற்கு இந்த ஒரு அடியைத் தவிர சிலப்பதிகாரத்தில் வேறு சான்றே இல்லை. இந்த ஒரு அடி அடிஎதுகை இல்லாமல் முன்பின் தொடர்பு இல்லாமல் ஒற்றை யாக நிற்கிறது. அப்படியானால் இந்த இடைச் செருகல் பதிகம் பாடிய பிற்கால ஆசிரியரின் கைவண்ணமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வேறு எந்த இடத்திலும் இவர்கள் சமணர்கள் என்ற கருத்தைப் புகுத்த முடியாத நிலையில் பதிக ஆசிரியர் சாவக நோன்பிகள் என்ற அடியை இடைச் செருகலாகப் புகுத்தியுள்ளார். இதன் உட்பொருள் வருமாறு : சமண சமயத்தைச் சேர்ந்த இல்லறவாசிகள் கூட மாலைப் பொழுது கழிந்து இருள் சூழ்வதற்கு முன்னர் உணவு உண்டுவிடுவர். எனவே பொழுது சாய்வதற்குள் கோவலன் கண்ணகி உண்டுவிட வேண்டும் என்றக் கருத்தைப் புகுத்துவதற்கு இந்த ஒர் அடியைப் புகுத்து கிறார் பதிக ஆசிரியர். அதன் பொருத்தமின்மையைப் பின்னர் காணலாம்.