பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 53 அவற்றை ஏற்றுக் கொண்டதாகவோ அதற்குரிய மகிழ்ச்சி கண்ணகி மனத்தில் தோன்றியதாகவோ அடிகள் குறிப்பிட வில்லை, சில காலங்கழித்து கோவலன் பிரிந்து போகிறான். பிரிந்து போய்ப் பதினைந்து வருடம் ஏறத்தாழ ஆகியிருக்கும். ஏனென் றால் பல ஆண்டுகள் மாதவியோடு வாழ்ந்து, ஒரு பெண்ணைப் பெற்று, தன் குலதெய்வத்தின் பெயராகிய மணிமேகலை என்ற பெயரை அதற்குச் சூட்டி வாழ்ந்து வருகிறான். அவன் பிரிந்துள்ள இந்நிலையில் கண்ணகி வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கணவன் அதே ஊரில் தான் இருக்கிறான். கண்ணகியிடம் ஒருமுறை கூட வரவேயில்லை என்பதை விடுதலறியா விருப்பினன் ஆயினன் வடுநீங்கு சிறப்பில்தன் மனையகம் மறந்தென் (அரங்கேற்று காதை 174, 175) இந்த அடிகளின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். அதற்காகக் கோவலனை அவள் குற்றம் சொல்லவில்லை. அப்படியானால் அவளுக்கு என்ன குறையாக இருந்தது? அதை அவளே பின்னர் கூறுகிறாள். தாங்கள் என்னிடம் வராமையால் மிக இன்றிமையாத சிலவற்றை இழந்துவிட்டேன்' என்று கூறு கிறாள். அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை . (கொலைக்களக் காதை 72-74) கண்ணகியின் இக்கூற்று அவள் வாழ்க்கையில் கொண்ட குறிக்கோள் என்ன என்பதை நன்கு அறிவுறுத்துகிறது. இல்லறப் பயனாக அவள் கண்டவை நான்கு, அவற்றுள் ஒன்று அந்தணர் ஒம்பல் என்பதாகும். இப்பழக்கம் சமண சமயத்த வர்க்கு இல்லை யென்பதை அறியலாம். கோவலன் கண்ணகி