பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அ.ச. ஞானசம்பந்தன் இருவரும் சமண சமயத்தவர் அல்லர் என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த குறிக்கோள் (Ultimate aim) ஒன்று இருந்தது. அது என்ன? திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், இந்தப் பிறப் பிலேயே வீடுபேற்றை அடைய வேண்டுமென்பதே அக்குறிக் கோள். நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தவர் காரைக்கால் அம்மையார், அவர்களுடைய வாழ்க்கையில் இதே குறிக்கோள் இருந்ததையும் அதே பிறப்பில் கண்ணகி போலவே காரைக்கால் அம்மையாரும் வீடுபேற்றை அடைந்தமையையும் அறிகிறோம். மற்றவர் தம்மை நோக்கி மானுடர் இவர் தாம் அல்லர்' (காரைக்கால் அம்மையார் 47) என்பதாக தன்னுடைய கணவன் சொல்லிவிட்டுத் தன்னைப் பிரிந்து போன பின்னர் “ஈங்கு இவன் குறித்த கொள்கை இது; இனிஇவனுக்காக, தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும்” (காரைக்கால் அம்மையார் 49) என்று வேண்டுகிறார் ஆகவே பிறக்கும் போதே ஒரு உறுதிப்பாடு, மோட்சத்தை அடைய வேண்டுமென்று. இரண்டாம் நூற்றாண்டில் கண்ணகியையும், நான்காம் நூற்றாண்டின் கடைசியில் காரைக்கால் அம்மையாரையும் பார்க்கிறோம். இந்த இரண்டு வரலாறுகள் தாம் தமிழகத்தில் தலை சிறந்து விளங்குகின்றன. ஆகவே கண்ணகியின் வாழ்க்கையில் துயரத்திற்கு இடமில்லை. அவளுடைய தோழி சோம குண்டம், சூரிய குண்டம் மூழ்கினால் கணவனைப் பெறுவாய் (கனாத்திறம் - 59) என்று கண்ணகிக்கு அறிவுரை கூறுகிறாள். அதற்கு கண்ணகி பீடன்று' (கனாத்திறம் 64) என்று மறுத்துவிடுகிறாள்.