பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 57 இவர்களை அழைத்துச் சென்ற மாதரி, கணவன் மனைவி யாக இருக்கின்ற இவர்களை ஒரு தனி விட்டில் இருக்கச் செய்கிறாள். கணவனுக்கு விருப்பமானதை மனைவி சமைத்துப் போடவேண்டும் என்ற எண்ணத்தில் இரவுச் சமையலுக்கு வேண்டியதைத் தந்ததுடன் தன் மகளையும் உதவிக்கு அனுப்பி வைக்கிறாள். சமையல் முடிந்தது, மனைவி பரிமாற கணவன் இனிதே உண்டான் தான் செய்த தவறுகளை வரிசைப்படுத்தி தன் வருத்தத்தை வெளியிட்டான். இந்த உரையாடல் எங்கே சென்று முடியும் என்பதை அறிந்த இளங்கோவடிகள் அதைத் தடுப்பதற்காக 'கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பின் ஒன்று கொண் டியான்போய் மாறி வருவன் மயங்காது ஒழிக’ (கொலைக்களக் காதை 91-93) என்று கோவலன் பேசுமாறு செய்கிறார். அவள் சிலம்பில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு கோவலன் புறப்பட்டுவிடுகிறான். மேலேயுள்ள மூன்று அடிகளில் மாறி வருவன் மயங்காது ஒழிக’ என்ற இரண்டு தொடர்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. ஒப்பற்ற சிலம்பை எடுத்துக் கொண்டு விற்கப் போகின்ற ஒருவன் அபசகுனங்களின் மொத்த இருப்பிடமாக மேலே கூறிய இரண்டு தொடர்களையும் பயன்படுத்துகிறான், செல் கின்றவனுடைய முடிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அடிகள் இவ்வளவு விரைவாக கோவலனை இரவோடு இரவாக சிலம்பை விற்க அனுப்புவதன் நோக்கம் யாது? பெருமதிப்புள்ள ஒரு பொருளை விற்கச் செல் கிறவன் பகலில் போவது தானே முறை? அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகக் கோவலனை வெளியே அனுப்புவதன் நோக்கம் யாது? அன்றிரவு இவர்களிடையே கூட்டம் நடை பெறாமல் இருக்க இது ஒன்று தான் வழி. இவ்வாறு செய்ததால்