பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பவற்றைக் கொண்டே தருக்க முறை ஆய்வாக இளங்கோவின் சமயம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று இந்த ஆசிரியன் நம்ப வில்லை. என்றாலும், நடுநிலையோடு இதனைப் படித்து மேலும் இதுபற்றிச்சிந்திக்க இக்கட்டுரை இடந்தருமாயின் அதுவே இந்த ஆசிரியனுக்கு மன நிறைவைத் தரும்.

ஒரே நூலைப்பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்ந்துள்ள பல கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஒரு கோணத்தில் இருந்து ஆயும் பொழுது சொல்லப்பட்ட பல கருத்துக்கள் வேறு கோணத்தில் இருந்து ஆயும் பொழுதும் மறுபடியும் இடம் பெற்றே திரும். எனவே கூறியது கூறல் என்ற குறைதவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனைக் கற்போர் பொறுத்துக் கொள்ள வேண்டு கிறேன்.

இளங்கோ கண்ட ஊழ் என்ற இரண்டாவது கட்டுரை ஐந்து சொற்கள், நான்கு நிகழ்ச்சிகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராயப்படுவதால் கட்டுரை முழுவதும் கூறியது கூறல் தவிர்க்க முடியாமல் வந்தே திரும். ஒவ்வொரு முறையும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பேசும் பொழுது குறிப்பிட்ட சில சொற்களுக்கு அழுத்தம் தந்து ஆராயப் பெற்றுள்ளது. நான்கு நிகழ்ச்சிகளைப் பற்றி ஆராயும் பொழுது ஒரு தடவை அல்லாமல், பலதடவை கூறியது கூற வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான நிலை தவிர்க்க முடியாது. ஆகவே கற்போர் இதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இளங்கோ அடிகள் சமயம் எது?’ என்ற கட்டுரையில் கண்ணகியைப் பற்றிப் பேசும் கருத்துக்கள், ஒரே பிறப்பில் வீடு என்ற கட்டுரையிலும் வேறு கோணத்தில் நின்று மறுபடியும் பேசப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியன்.

சென்னை - 600 083. மார்ச் - 96