பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 59 கிறான் கோவலன். மறுநாள் மாலை வெட்டுண்டவன் உடலைக் காண்கிறாள் கண்ணகி, உணவு உண்டபின் மையீர் ஒதியை வருகெனப் பணித்து தழுவி விடை கொண்டிருக்க வேண்டும் கோவலன், சென்றவன் மீளவேயில்லை. அப்படியிருக்கக் காலை வாய் தழுவி நின்ற கோவலனைக் கண்டாள் என்று அடிகள் கூறுவது அவர் கொண்ட காலப்பிரமானத்தோடு மாறுபடுகிறது. இதை நன்கறிந்தும் அடிகள் அதுபற்றி கவலைப்படாமல் காப்பியம் செய்கிறார். காரணம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் விட்டுப் போன கணவன் மனைவி உறவு புதுப்பிக்கப்படலாகாது என்ற தம் கருத்தை நிறுவுவதற்காக அடிகள் தெரிந்தே இந்தக் கால வழுவைச் செய்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு மேல் கண்ணகி துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தாள் என்பதை அரும் பாடுபட்டு நிறுவுகிறார் ஆசிரியர் மீண்டு வந்த கோவலனுடன் அவள் உறவு கொள்ளவில்லை என்பதை கொலைக்களக்காதை வரை கொண்டு செலுத்திவிடுகிறார். ஒரு பிறப்பில் ஒருவர் ஆனாயினும் சரி, பெண்ணாயினும் சரி துறவு வாழ்க்கை ஒன்று மட்டுமே துறக்கம் செல்ல வழி வகுக்குமா என்றால் இல்லை என்ற விடைதான் கிடைக்கும். மன ஒருமைப்பாடு, புலனடக்கம், காமம், குரோதம் முதலிய குற்ற மின்மை ஆகிய அனைத்தும் தேவைப்படும். ஆனால் இவை மட்டும் இருந்துவிட்டால் போதுமா என்றால் இவையனைத் திற்கும் அப்பாற்பட்ட ஒன்று மிகுதியும் தேவையென்பதை இந் நாட்டவர் என்றோ கூறியுள்ளனர். அந்த ஒன்று அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் அன்பாகும். அன்புடைமை ஒன்றே துறக்கத்தின் திறவு கோலாகும்.