பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 65 புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் என்ற இரண்டு காண்டங்களிலும் ஊழ்வினை என்ற சொல் இருமுறையும், வினை என்ற சொல் இருமுறையும் பயின்றுள்ளன. இந்நான்கு இடங்களையும் ஆழ்ந்து சிந்தித்தால் அடிகள் ஊழ்பற்றிக் கொண்ட தெளிவான கருத்தை ஒருவாறு ஊகிக்கமுடியும். முதலாவதாக ஊழ் என்ற சொல் கானல்வரியில் பயிலப் பெறுகிறது. கோவலன் வரிப்பாட்டைக் கேட்ட மாதவி யாழை வாங்கி மன்னும் ஒர் குறிப்புண்டு இவன் தன் நிலை மயங் கினான் என..தானும் ஒர் குறிப்பினன் போல் (கானல் வரி - 24) வரிப்பாட்டிசைத்தாள். அப் பாடலைக் கேட்டுக் 'கானல் வரி யான் பாடத் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்'எனக் கருதிய கோவலன், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய்” மாதவியை எழச் சொல்லி உடன் எழாமல் ஏவலாளர் உடன் குழ்தரத்"தான்மட்டும் சென்றுவிட்டான். இதனைக் கூறவந்த அடிகளார், அவளை மாயத்தாள் பாடினாள்” எனக் கோவலன் கருதிவிட்டான் என்று கூறும் நேரத்தில் ஊழைத் துணைக்கு அழைக்கின்றார். யாழ் இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் எழுதும் என உடன் எழாது (கானல், வரி 52) கோவலன் போய் விட்டான் என்று கூறுகிறார். மாதவியிடம் மனம் மாறுபட்ட கோவலன் சில நேரம் கடைத் தெருவில் தங்கி மாதவி அனுப்பிய காதற் கடிதத்தை வாங்க மறுத்து நடு யாமம் கழிந்து சில நாழிகை கழிந்தபின் தன் வீடு சென்றான். கண்ணகி, சிலம்பைக் காட்டி கொள்க’ எனக் கூறியவுடன் அவனுக்கு அதுவரை இல்லாத புதியதோர் எண்ணம் பிறந்தது. அந்த எண்ணத்தை ஆர அமர ஆராய்ந்து அதன்