பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 67 “வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினைஅலர் வேம்பன் தேரானாகி ஊர்காப் பாளரைக் கூவி, ஈங்கு என் தாழ்பூங் கோதைதன் காற் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு” (கொலை. கா. 148-153) என்ற கூறுகிறார். இனி இறுதியாக வினைபற்றிப் பேசப்பெறுகின்ற இடம் கோவலன் வெட்டுண்ட பொழுதாகும். “காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (கொலை. கா. 216-217} இந்த நான்கு இடங்களில் அடிகள் ஊழைக் கூறவேண்டிய காரணம் என்ன என்று ஆராய்வது பயனுடையதாகும். முதலாவ தாக உள்ள வரிப்பாடற் பகுதியை எடுத்துக் கொள்ளலாம். "யாழ் இசைமேல் வைத்து, ஊழ்வினை வந்து உருத்தது” என்று கூறும் இடம் நம் கவனத்தைக் கவருகின்ற அதே நேரத்தில் இதன் பின்னணியையும் நன்கு அமைத்துக் காட்டுகிறார் ஆசிரியர், கடற்கரைக்கு வருகின்ற நேரத்திலேயே கோவலன் தன்னிலையில் இல்லை என்பதை அறிவிக்கின்றார். கடற் கரைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் மாதவிக்கு மட்டும் இருந்தது என்பதையும் அவள் விரும்பியதற்காகவே கோவலன் வந்தான் என்பதையும், "மடல்அவிழ் கானல் கடல் - விளையாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினள்” (கடலா. 113-14) என்ற அடிகளில் ஆசிரியர் கூறிவிட்டார்.