பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 71 கற்புநிலையில் எவ்விதத்திலும் கண்ணகிக்குக் குறைவு படாத மாதவியைப் பார்த்து, இவ்வளவு பெரிய அடாப்பழியைச் குட்டிவிட்டானே! அதுவும் பல்லாண்டுகள் தன்மனையகம் மறந்து. (அரங்-175) மாதவியுடன் வாழ்ந்த பிறகு பேசுவது முறையா? ஒருவேளை பேசினவன் கயவனாக இருந்திருப்பின் அவன் அப்படித்தான் பேசுவான் என்று சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால் பண்புடையார்கட்கெல்லாம் தலைமகனாகிய கோவலனல்லவோ இவ்வாறு நினைத்துவிட்டான். பண்புடையவன் இவ்வாறு நினைத்தபோதும் அவளுடைய கற்பு மேம்பாடு அவன் மனத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அவன் கூறிய சொற்களே காட்டிவிடுகின்றன. தான் ஒருவன்மேல் மனம் வைத்து” என்று கூறாமல், தான் ஒன்றின்மேல் மனம்வைத்து” என்றுதான் அத்தனை மன மாறுபாட்டிலும் அவனால் பேச முடிகிறது. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது எதிரில் உள்ளவர் வேறு ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு இவர் பேசு வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதை இன்றும் உலகிடைக் காணமுடியும். இவ்வாறு நடைபெற்றால் இதனை மன்னிக்கமுடியாத குற்றம் என்றோ, மாயப் பொய் வாழ்க்கை உடைமையின் இவ்வாறு செய்தனர் என்றோ யாரும் கூறுவதில்லை. அப்படி இருக்கக் கோவலன் இந்த முடிவுக்கு வந்தான் வந்ததுடன் நில்லாமல் அதனைச் செயற்படுத்தவும் துணிந்தான். எழுதும் என்று அவளை உடன்எழச் சொல்லாமல் தன் ஏவலாளர் உடன் குழ்தரக் கோவலன் போய்விட்டான். என்றோ நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியையும் இதில் பங்கு கொண்ட இருவரையும் அவர்கள் வாழ்க்கையையும் தம்