பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது?-75 அவன் சொல்லுமாறு செய்கிறது. சிலம்பைக் கொண்டு மதுரைக் குச் சென்று இழந்த பொருளையெல்லாம் ஈட்டப் போகிறேன் என்று சொல்ல வந்த அவன் ஒரு காரணமும் இல்லாமல் தேவை யும் இல்லாமல், வணிகர் மரபுக்கு விரோதமாக கண்ணகியைப் பார்த்து ஏடலர் கோதாய் எழுக” என்று கூறினான். அவனை இவ்வாறு கூறச் செய்ததும் ஊழே ஆகும். என்ன கொடுமை, மாதவியிடம் எழுதும் என்று சொல்லி இருந்தால் கதையே மாறுபட்டிருக்கும் கண்ணகியிடம் எழுக タ என்று சொல்லாமல் இருந்திருந்தால் கதையே மாறுபட்டிருக்கும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமலும், சொல்லவேண்டாத இடத்தில் சொல்லியும் தன் வாழ்வை முடித்துக் கொள்ளுமாறு செய்தது ஊழே ஆகும். r. இந்த இடத்தில் யாழ் இசையை நுழை வாயிலாகக் கொண்டு ஊழ்வினை வந்து உருத்திற்று. அவ் உருத்தல் காரண மாக கோவலன் இதுவரை செய்யாத ஒரு செயலைச் செய்தான். மாதவியோடு பழகிய பதின்மூன்று ஆண்டுகளிலும் அவர்கள் கருத்தொருமித்தே வாழ்ந்தனர். ஒரிடத்தைவிட்டுப் புறப்பட வேண்டுமென்றால் கோவலன்நாமிருவரும் புறப்படுவோம் என்ற பொருளில் எழுதும் என்று சொல்வதே வழக்கமாகக் கொண்டிருந்தான். அவன் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை யானால் மாதவி அந்த இருக்கையை விட்டு எழ மாட்டாள். இந்த உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைச் சொல் கோவலன் வாழ்க்கையில் மாபெரும் பூகம்பங்களை உண்டாக்கிவிட்டது என்பதை அறிகிறோம். சொல்ல வேண்டிய இந்த இடத்தின் எழுதும் என்று அவன் சொல்லாமல் விட்டுவிட்டான். அதன் பயனாக பதிமூன்று வருஷ இணை பிரியா வாழ்க்கை பிளவு பட்டு விட்டது.