பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அ.ச. ஞானசம்பந்தன் இதனை அடுத்து விதிபற்றிப் பேசப்படும் இடம் கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்படும் போதாகும். மாதவியை விட்டுவந்த கோவலன் மதுரை செல்லவேண்டும் என்றோ, அங்குச் சென்று வாணிகம் செய்யவேண்டும் என்றோ நினைத்த தாகத் தெரியவில்லை. சிலநாட்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்து விட்டுத் தன் வீட்டினுள் புகுந்தான். எதிர்கொண்டு அழைத்த கண்ணகி நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக் சிலம்புஉள கொண்ம்"(கனா. கா 72-73) எனக் கூறினாள். அந்தச் சிலம்பு அவளுடைய பழைய சிலம்புதான். திருமணமான பின்னர்ச் சிலம்பு அணியும் வழக்கம் இல்லையாதலின் அப் பெருமாட்டி உள்ளே இருந்த சிலம்பைக் கையிற் கொணர்ந்து அவன் முன் காட்டினாள் போலும் மிக நீண்ட காலமாக அவனால் காணப் படாத அந்தச் சிலம்பைக் கண்டவுடன் 'குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நானுத்தரும்”(கனா. கா. 70-71) என்று கூறிக்கொண்டு உள்நுழைந்த கோவலனுக்குப் புதியதோர் எண்ணம் தோன்றலாயிற்று. சிலம்பைக் கண்டவுடன் 'சேயிழை கேள், இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் - மலர்ந்த சீர் மாடமதுரை அகத்துச் சென்று” (கனா. கா 74-76) என்று கூறவந்தான். ஆனால் அவ்வாறு கூறும்பொழுது முன் பின் யோசித்து ஆராய்ந்து இந்த முடிபுக்கு அவன் வந்ததாகவும் கூற முடியவில்லை. - கடற்கரையிலிருந்து தனியே வந்துவிட்ட கோவலன் கடைவீதியில் சில நாட்கள் கழித்தான் என்று நாம் கருதும் படியாக அடிகள் வேனில் காதையை இடையில் வைக்கின்றார். கோவலன் மனநிலையை நன்கு அறியாத மாதவி, வசந்தமாலை என்ற தோழியின் மூலம் திருமுகம் ஒன்று அனுப்புகிறாள். கடைவீதியிலிருந்த கோவலனிடம் வசந்தமாலை அதனை