பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 77 எடுத்துச் செல்கிறாள். கோவலன் அதனை வாங்க மறுத்ததுடன் 'ஆடல் மகளே ஆதலின்பாடு பெற்றன. அப்பைந்தொடி தனக்கு” (வேனில் 109-110) என்று மறுபடியும் மாதவியை இழித்துப் பேசிவிடுகிறான். இவ்வளவு வெறுப்புற்றமையின், மறுபடியும் ஊரில் இருந் தால் மாதவி தொடர்புகொள்ள முயலுவாள் என நினைந்து ஊரை விட்டே சிலகாலம் சென்றுவிட வேண்டும் என்று கருதினானா என்பதும் தெரியவில்லை. எது எவ்வாறாயினும் கண்ணகி சிலம்பைக் காட்டியபொழுதுதான் அவனுக்கு இந்த எண்ணம் தோன்றிற்று என்பதைக் காட்டவே கவிஞர் இச் சிலம்பு முதலாக...” என்று கூறுகிறார். இச் சிலம்பை முதலாகக் கொண்டு என்றதில் இந்த என்ற அடை கொடுத்தது.அவனுடைய எண்ணத் தோற்றத்தை அறிவுறுத்தவேயாகும். எது எவ்வாறாயினும் ஒரு பெரு வாணிகன் மகன், புதிதாக ஒர் ஊருக்குச் சென்று மனைவியின் கால் சிலம்பையே முதலாக வைத்து வாணிகம் தொடங்கி இழந்த பொருள் அனைத்தையும் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன் அதுபற்றி எத்தனை நாட்கள், எத்தனை பேருடன் கலந்து எப்படி முடிவு எடுக்கவேண்டும்? புதிய ஊர், புதிய தொழில், புதிய முதல் என்றால் எந்த வாணிகனும் திடீரென்று ஒரு முடிவுக்கு வரமாட் டான். ஆனால் கோவலன் ஒரு வினாடியில் முடிவு செய்து விட்டான்! அதைவிடக் கொடுமை ஒன்றுமறியாத பேதைப் பெண்ணாகிய கண்ணகியை விளித்து ஏடுஅலர் கோதாய் என்னோடு ஈங்கு எழுக” (கனா, 77) என்று கட்டளை வேறு இட்டுவிட்டான். இவை இரண்டும் ஒரே வினாடியில் நடைபெற்று விட்டன. சாதாரண மனிதன்கூடப் புது இடத்திற்குச் செல்வ தாயின் முதலில் தான் மட்டுஞ் சென்று இடம் முதலியவற்றைப் பார்த்துப் பிடித்தமான பிறகு குடும்பத்தை அழைத்துச் செல்வான். ஆனால் ஒரு கோடீசுவரன் மகளை, வீட்டு வாயிற்படியைத்