பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது?

தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை சில தனிப்பட்ட பழக்கங்கள் நமக்கு உண்டு. ஒரு நூல் அல்லது இலக்கியம் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பலகாலமாக இந்நாட்டில் இருந்து வந்துள்ளது. கர்ன பரம்பரைக் கதைகளுக்கும் நாளாவட்டத்தில் இதே மதிப்பு தரப்பெற்றது. வரலாறு, செவி வழிச் செய்தி என்ற இரண்டும் ஒன்றாகவே மதிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக ஐம்பெருங் காப்பியம்’ என்ற தொடரை எடுத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி என்ற ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தலைப்பில் அடங்குவதாக இன்றும் கூறிக்கொண்டு வருகிறோம். சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றியதால் ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடர் பதினான்கு அல்லது பதினைந்தாவது நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும். இந்த ஐந்து நூல்களுள் சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி ஆகிய மூன்றும் பெருங்காப்பியம் என்ற பெயருக்குப் பொருத்த மானவையேயாகும். ஆனால் வளையாபதியும், குண்டலகேசியும் காப்பியம் என்ற பெயருக்குத் தகுதியுடையனவா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு உரியன. சூளாமணி போன்ற காப்பியம் ஒன்றேனும் இந்த ஐந்தில் ஏனோ இடம் பெறவில்லை. யாரோ ஒருவர் நாட்டைவிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்