பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 85 பெறுகிறது. அனைத்து அறிவும் உடைய ஒருவன் உணர்ச்சிகளால் உந்தப்பெற்று அறிவு தொழிற்படாமல் போகின்ற அளவு சென்று - விடுகிறான். இத்தகைய நேரங்களில் அவனுடைய கல்விஅறிவு, கேள்வி அறிவு, பட்டறிவு ஆகிய எதுவும் அவனுக்குக் கை - கொடுக்க முன்வருவதில்லை. சினம், பொறாமை முதலிய உணர்ச்சிகள் தம் அளவில் அதிகம் தலைதூக்கும்பொழுது ஏனைய கருனை, அன்பு, இரக்கம் முதலிய உணர்ச்சிகள்கூட விடைபெற்றுக் கொள்கின்றன. கோவலன் கானல்வரியின் பின்னர் நடந்துகொண்ட முறை இவ்வகையின் பாற்படும். அவனுடைய நூலறிவு, கேள்வி அறிவு என்பவை பயன்படாமற். போனதுடன் இதுவரை மாதவியுடன் வாழ்ந்து, அவள் பண்பாடு மிகுதியும் உடையவள் என்பதை அறிந்திருக்கக் கூடிய பட்டறிவும் பயன்படவில்லை. அறிவு தொழிற்படாமற்போனது ஒரு புறம். இரக்க உணர்ச்சி அல்லது அன்பு முதலிய யாதேனும் ஒர் உணர்ச்சி வெளிப்பட்டிருந்தாற்கூட மாதவியை இவ்வாறு தண்டிக்க மனம் ஒருப்பட்டிருக்கமாட்டான். திடீரென்று மாதவி பாடிய பாட்டின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் இவ்வாறு செய்து விட்டான் என்று கொள்ளவும் முடியவில்லை. திடீரென்று தோன்றும் சினம் அல்லது வெறுப்பு ஒரு நாள் முழுவதும் இருந்து மறுநாளும் நீடிக்கும் என்று கூற முடியாது. வசந்தமாலை கொணர்ந்த கடிதத்தை வாங்க மறுத்ததுடன் சுடு சொற்களால் ஏசியும் விட்டான். கானல்வரிப் பாட்டைக் கேட்டவுடன் என்ன சொற்களால் ஏசினானோ அதே சொற்களை அதாவது அவள் பொதுமகள் என்பதை மறுமுறையும், ஆடன்மகளே ஆகலின் பாடு பெற்றன. அப் பைந்தொடி தனக்கு'(வேனி, கா. 10) என்ற முறையில் பேசிவிட்டான். எனவே அவனுக்கு நேர்ந்த மனமாற்றம் திடீரென்று தோன்றிய வெறுப்புணர்ச்சியன்று. w ஆழமாகப் பதிந்துவிட்ட இந்த வடுவிற்கு மாதவி எவ்விதத் திலும் காரணமில்லை என்பதை நாம் அறிவோம்.