பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 87 கூறுகிறார். அவனுடைய விதி அவனை மதுரைக்கு அழைத்து விட்டது. ஏதாவது ஒரு நொண்டிக் காரணம் வேண்டுமே. அந்தக் காரணத்திற்கு யாழ் இசை பயன்பட்டது என்று அறிகிறோம். ஊழ் வேலை செய்யும் வகைகளில் ஒன்றைக் காணும் வாய்ப்பை இளங்கோவடிகள் இந் நிகழ்ச்சியில் தந்துள்ளார். அடுத்துள்ள ஒரு நிகழ்ச்சி விதியின் வலிமையை அறிவுறுத்துவதாகும். விதியின் செயலைத் (inexorable fate) தடுத்து நிறுத்தல் சாதாரன மக்கட்கு இயலாத காரியம். எந்த வினாடியில் தொடங்குகிறதோ அதிலிருந்து அக்காரியம் முடிகின்றவரை விதியினால் உந்தப் பெறுபவர்கள் செயல்கட்கு அவர்கள் பொறுப்பாவதில்லை. மனைவி சிலம்பைக் காட்டியவுடன் அதையே முதலாகக் கொண்டு மதுரை சென்று பொருளிட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு உண்டாக்கியதே விதிதான். அடுத்துள்ள நிகழ்ச்சியில் வினை வேறு விதமாக விளை யாடுகிறது. மரணத்தை நோக்கிக் கோவலனைப் பிடர் பிடித்து உந்திச்செல்லும் விதி பாண்டியன் மரணத்தையும் பின்னுகிறது. முன்பின் ஒருவரை ஒருவர் பார்த்திராத கோவலனும் பாண்டியனும் ஒருவர் மரணத்திற்கு மற்றொருவர் காரணமாகின்றனர். அதைவிட விந்தை யாதெனில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே மடிகின்றனர். பாண்டியன் அவசரத்தால் கோவலன்மடிகிறான். குற்றமற்ற கோவலன்மரணம் அவசரக்கார மன்னனுடைய மரணத்திற்கு நேர் காரணமாகிறது, யான் 'கன்றியகள்வன் கையில் என் தேவியின் சிலம்பு இருந்தால் அவனைக் கொன்று, கொணர்க என்றுதான் கட்டளையிட்டேன். அது தேவியின் சிலம்பா இல்லையா என்று பார்க்கத் தவறியது