பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அ.ச. ஞானசம்பந்தன் காவலர் பிழையேதவிர என் பிழையன்று” என்று பாண்டியன் எதிர் வழக்காடி இருக்கலாம். ஒருவேளை அவன் இவ்வாறு கூறி யிருந்தால் கண்ணகியின் கட்சி வலுவிழந்திருக்கும். ஆனால் பாண்டியனை அவ்வாறு நினைக்கக்கூட விடவில்லை விதி. பொன் செய் கொல்லன் தன் சொற்கேட்ட யானே கள்வன்'(வழ. கா 75) என்று கூறிக்கொண்டவுடன் அவன் மரணமடைகிறான். விதி சிரிக்கின்றது! அவன் மரண தண்டனை பெறவேண்டிய குற்றம் என்ன செய்தான்? கோவலன் மரணத்திற்குக் காரணம் கூறமுடியாததுபோல் பாண்டியன் மரணத்திற்கும் வேறு காரணம் கூறமுடியாது. அதனைக் காட்டவே அடிகள் வினை விளை காலம் என்றார். இந்தக் கொடுநாடகத்தில் எப்பங்கும் பெறாத கோப்பெருந் தேவி ஏன் உயிரிழக்கவேண்டும்? 'வினை விளைகாலம்”என்ற பொதுச் சொற்கள், கோவலன், பாண்டியன், கோப்பெருந்தேவி, கண்ணகி என்பவருடன் நில்லாமல் இடையர்குலக் கொடி மாதரி முதல் பலரையும் பற்றி நிற்கக் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்திருந்த கோவலன் தாய், தந்தையர், மாமன், மாமியர், அவன் மனைவியாகவே வாழ்ந்த மாதவி அவள் மகள் மணி மேகலை ஆகிய அனைவரையும் அச்சொற்கள்பற்றி நிற்கின்றன. இத்துணை பேருக்கும் வினை விளைந்து பயன்தரும் நிலையில் இருந்தது. அனைவருக்கும் ஒருசேரப் பயன்தர ஏதாவது ஒன்று காரணமாக அமையவேண்டும். யாரைப்பற்றினால் இத்தனை பேரையும் அழிக்க முடியும் என்று விதி ஆராய்ந்து பார்த்து இறுதியாக முடிவு எடுத்ததுபோலும்! என்ன அற்புதமான முடிவு எடுத்தது! ஒரு சில சொற்கள் கூறினான் பாண்டியன். ஆம் ஆராயாமற் கூறியவைதாம் அச்சொற்கள். சினை அலர் வேம்பன் தேரான் ஆகி"என அடி