பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையொற்றுந் தாளில் ஒரு துளி மைவிழுந்தாலும் கசிந்து பரவுவது போல் கவிஞன் மனத்தில் ஒருசிறு நினைவெனினும் இன்பமோ, துன்பமோ-மிகுதியாக ஊறிவரும். அத்தகைய மனமே கவிதை பிறக்கக் களமாகின்றது. கவிதையைச் சுவைக்கவும் திறம் பெறுகின்றது. ஒவியர்கள் சித்திரம் வரைவதற்கென்று தானே எடுப் பார்கள். ஒவியம் துவங்கு முன்னதாக, தாளே நீரில் நனைப் பார்கள். இல்லையேல் தாளை ஈரப்படுத்தி வைப்பார்கள். அதன் பின்னரே வண்ணம் நன்ருக, படலம் படலாக ஏற்றப் படும். அதுபோல ஈரமான இதயத்தில்-உணர்வுகள் ஊறும் ஆத்தில்தான் கவிதை அநுபவமே படிப்படியாக உருப் பறும. ஒரு மன ஏட்டில் மற்ருெரு மனம் வரிவரியாய் வனேந்: தெழுதும் ஓவியம் கவிதையாகின்றது. மனிதன் பேசும் மொழி ஒரு முதல் விந்தை. அம்முதல் விந்தையின் வழிவந்த இறுதி விந்தை-இதயச் சுருதி விந்தை கவிதையே. மனிதனின் மொழி செய்தி சொல்லும்; கவிஞனின் மொழி சிரிய உள்ளங்களின்" செய்தி சொல்லும், சொற்கள் குவிந் தால் மொழியாகும்; சொற்களில்-சொல்லமைப்பில் உணர்வு குவிந்தால் கவிதையாகும். உணர்வு வற்றினல் எத்துனே அழகிய சொற்களானலும் சிதறிய வண்ணத்திட்டுக்களாக நிற்கும்; கண்டு கருதத்தகும் ஓவிய மொழிவார்ப்பாக, உணரும் கவிதை வடிவாக அமைவதில்லை! உணர்வால் சொற்கள் குவிந்தால்-கவியுள்ளம் அங்கே பொதியவிழும். பொதியவிழ்ந்த மனமே கண்திறக்க மறுக்கும் காரண அறிவுக்குக் (Reason) கண் திறந்துவிடும். மனம் கொடுத்த பார்வையைக் கருதும் காரண அறிவு பெற்ருல் உலகம் கற்பனைக் களமாகத் தெரியும். கற்பனை என்பதே கவிதை உறவு கொண்டாடும் உலகக் களமாகத் தெரியும். வானில் வானகம் தெரியும்; மண்ணில் மண்ணகம் புரியும். கவிஞனின் இதயம் விரிவாக, காண்பவை விரிந்தன. வாகத் தோன்றும். கவியுள்ளத்தின் மாண்பே காணும் உலகக் காட்சி வழியே வெளிப்படரும். எனவே, உலகங் கொடுத்த உண்மைகளே உள்ளங் கொடுத்த கற்பனையோடு 106