பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளேத் தமிழ் நூல்களிலே குமரகுருபர அடிகள் அருளிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் கவினழகு வாய்ந்த தமிழ் நடையும் கற்பவர் மனத்தை ஈர்க்கும் பெருஞ்சுவையும் பொருந்திய சிறப்புடையது. அழகு கொழிக்கும் அப்பிள்ளைத் தமிழிலேயே எழிலின் உச்சமெனக் புலவர்கள் போற்றும் பாட்டு இதுவாகும். தொடுக்குங் கடவுட் பழம்பாடற் ருெடையின் பயனே நற்ைபழுத்த துறைத்தீந் தமிழி ைெழுகுநறுஞ் சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்யில் விளையாடு மிளமென் பிடியே யெறிதரங்க முடுக்கும் புவனங் கடந்துநின்ற வொருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கு முயிரோ வியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே. சிறப்பு மிகுந்த இந்நூல்கள் யாவிலும், பாட்டுடைத் தலைவனேப் பிள்ளையாக வைத்துப் பேசுகின்ற நூலாசிரியர்கள், பிள்ளைப் பருவத்துச் செயல்களைக் காட்டிலும், அத்தெய்வங்கள் அல்லது ப்ெரியார்களின் அரும்பெரும் செயல்களேயே பெரிதும் பாடி வைத்திருக் கிருர்கள். பிள்ளைத் தமிழில் பிள்ளையைப் பிள்ளே நிலையிலேயே முழுதும் வைத்துப் பாடினல் பொருத்தமாயிருக்குமே என நினேத்தேன். அதன் விளேவே இந்நூல். குருபரர் போன்ற அருளும் புலமையும் பெருகிய நிலேயினன் அல்ல என்றலும், பொருளும் சிறப்பும் பொருந்தவே இந்நூலே எழுதி யுள்ளேன். பெற்ருேர் தம் குழந்தைகளேப் பேச்சால் மட்டுமல்லாமல் தமிழ்ப் பாட்டாலும் கொஞ்சி மகிழ இப்பிள்ளேக் கவியமுதம் பெரிதும் உதவும் என்று கூறுவேன். எவரும் பாடி மகிழத்தக்க எளிய நடையில் உள்ள இந்நூலேத் தமிழன்பர்கள் போற்றி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாரா நாச்சியப்பன்